சென்னை, அக். 6- ஒன்றிய அரசு வழங்கிய நான்கு சத வீத அகவிலைப்படி உயர்வினை தமிழக அரசு ஊழியர் ஆசிரியர் களுக்கும் உடனடியாக வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் முதல்வர் மு.க.ஸ்டா லினுக்கு வேண்டுகோள் விடுத்துள் ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலை வர் மு. அன்பரசு மற்றும் பொதுச் செய லாளர் ஆ. செல்வம் ஆகியோர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு: ஜாக்டோ-ஜியோ மாநாட்டில் பங்கேற்ற தமிழக முதல்வர், நிச்சய மாக உங்கள் கோரிக்கைகளை நிறை வேற்றி தருவோம் என்று உறுதி அளிக் கிறேன் என்றார். உங்கள் குறைகள் எதுவாக இருந்தாலும் உங்களது துறை அமைச்சரிடம் முறையிடலாம். அவர்கள் நட்போடு அணுகுமுறையை கொண்டிருப்பார்கள். அவர்களிடம் உங்கள் கோரிக்கையை தெரிவித் தால் உறுதியாக என்னுடைய கவ னத்திற்கு வரும். அதை தீர்ப்பதற் கான நடவடிக்கை மேற்கொள்ளப் படும் என்று கூறினார். அந்த நம்பிக்கை யுடன்தான் அரசு ஊழியர்களும், ஆசி ரியர்களும் இருக்கிறார்கள். கடந்த ஒன்றரை ஆண்டுகளில் அக விலைப்படியை தவிர வேறு எந்த கோரிக்கையும் நிறைவேற்றப்படாத நிலையில் விலைவாசிப்புள்ளி உயர்வுக்கு ஏற்றாற்போல் ஒன்றிய அரசு எப்பொழுதெல்லாம் ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு வழங்கப் படுகிறதோ அப்பொழுதெல்லாம் மாநில அரசு ஊழியர்களுக்கும் வழங் கப்பட்டு வந்தது. தற்போது ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு வழங்கியதை போன்று அதே தேதியில் நான்கு சத வீத அகவிலைப்படி அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு உடனடியாக வழங்கிட வேண்டும். இது பண்டிகை காலம் என்பதால் தமிழக முதல்வர் முன்னுரிமை அடிப்படையில் அக விலைப்படி அறிவிக்க வேண்டும்.