states

உ.பி.யில் தகுதியற்ற 21 லட்சம் பேருக்கு வழங்கப்பட்டு வந்த ரூ.6 ஆயிரம் நிதியுதவி

லக்னோ, செப்.9- கிஷான் சம்மான் எனப்படும் பிரதமரின் விவசாயிகள் நிதியுதவித் திட்டத்தின் கீழ், உத்தரப் பிரதேசத்தில் தகுதியற்ற 21 லட்சம் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் நிதியுதவி வழங்கப்பட்டு வந்தது வெளிச்சத்திற்கு வந்ததுள்ளது. 1 கோடி விவசாயிகளுக்கு ஆண்டு க்கு ரூ.6 ஆயிரத்தை அவா்களது வங்கிக் கணக்கில் செலுத்தும் திட்டத்தை, பிரதமர் மோடி கடந்த 2019-ஆம்  ஆண்டு பிப்ரவரி 24-ஆம் தேதி உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில் தொடங்கி வைத்தார். அண்மையில் நடைபெற்ற உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலி லும் இந்தத் திட்டத்தை முன்வைத்தே பாஜக வாக்குகளை அறுவடை செய்தது. இந்நிலையில், உத்தரப் பிரதேசத்தில் சுமார் 21 லட்சம் தகுதியற்ற பயனாளிகளுக்கு ரூ.6 ஆயிரம் நிதியுதவி வழங்கப்பட்டு வருவ தாக உ.பி. பாஜக அரசே தற்போது ‘கண்டுபிடித்து’ கூறியுள்ளது.

இதுதொடர்பாக உ.பி. மாநில வேளாண் துறை அமைச்சர் சூர்ய பிரதாப் ஷாஹி பேட்டி ஒன்றையும் அளித் துள்ளார்.  அதில் அவர் கூறியிருப்பதாவது: “பிரதமரின் விவசாயிகள் நிதி  உதவித் திட்டத்தின் கீழ் ஆண்டு தோறும் ரூ.6 ஆயிரத்தை மூன்று தவணை களில் விவசாயிகளின் வங்கிக் கணக்கு களில் ஒன்றிய அரசு செலுத்தி வருகிறது. நாடு முழுவதும் 2.85 கோடி விவ சாயிகள் இந்தத் திட்டத்தின்கீழ் பயன டைந்து வருகின்றனர். இதில் வருமான  வரி செலுத்துபவர்களும், கணவன்-மனைவி என இருவரும் இந்த உதவித் தொகையைப் பெற்று வருவது தவறானதாகும். இதேபோன்று பல்வேறு வகை யில் உத்தரப் பிரதேசத்தில் மட்டும்  21 லட்சம் தகுதியற்ற விவசாயிகள் உதவித் தொகையைப் பெற்று வரு வது விசாரணையில் கண்டுபிடிக்கப் பட்டு உள்ளது. அவர்களுக்கு அளிக்கப் பட்ட தொகை திருப்பி வசூலிக்கப்படும். நில ஆவணங்கள் மற்றும் நேரில்  ஆய்வுக்கு உள்படுத்தப்பட்ட விவ ரங்கள் ஆகியவற்றை இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட விவசாயி களுக்கு மட்டும் நிதி உதவி வழங்கப் படும். தகுதியற்றவர்கள் இந்தத் திட்ட த்தின் பயனாளிகளாக இருப்பதாக புகார் வந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.” இவ்வாறு அமைச்சர் பேட்டியில் கூறியுள்ளார்.