சென்னை,ஜூலை 8- பருத்தி விவசாயிகளைப் பாது காத்திட ஒன்றிய, மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் சாமி. நடராஜன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: தமிழ்நாட்டில் பருத்தி சாகுபடி இரண்டு பருவங்களில் சாகுபடி செய்யப்படுகிறது. நஞ்சைப் பகுதி யில் சாகுபடி செய்யப்பட்ட பருத்தி கள் தற்போது அறுவடை செய்யப் படுகிறது. குறிப்பாக தஞ்சை, மயிலாடு துறை, திருவாரூர், அரியலூர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் ஒரு பகுதி யில் அறுவடை செய்யப்பட்ட பருத்தி க்கு உரிய விலை கிடைக்காமல் விவ சாயிகள் கடுமையாக பாதிக்கப்பட் டுள்ளனர். புஞ்சை பகுதியில் (கோடை இறவை) பருத்தி சாகுபடி நடை பெற்றுள்ளது. கடந்தாண்டு பருத்தி சாகுபடி செய்த விவசாயிகளுக்கு கட்டுப்படி யான விலை கிடைத்ததால் இந்தாண்டு சற்று கூடுதலாக பருத்தி சாகுபடி பரவலாக நடைபெற்றுள்ளது. இந் நிலையில் ஒன்றிய அரசு அறிவித் துள்ள குறைந்தபட்ச ஆதார விலை நடுத்தர இழை பருத்திக்கு குவிண்டால் 6620 ரூபாயும், நீண்ட இழை பருத்திக்கு குவிண்டாலுக்கு 7020 ரூபாயும் அறிவித்துள்ளது. உற்பத்திச் செலவுகள் அதிகரித்துள்ள நிலையில் ஒன்றிய அரசு அறி வித்துள்ள இந்த குறைந்தபட்ச ஆதார விலை போதுமானதல்ல என்ற நிலை யில், இந்த விலை கூட தற்போது தமிழ்நாட்டில் பருத்தி விவசாயிகளு க்கு கிடைக்கவில்லை. ஒன்றிய அரசின் பருத்தி கழகம் கடந்த சில ஆண்டுக ளாக முறையாக காலத்தோடு விவசா யிகளிடம் பருத்தி கொள்முதல் செய் யாததால், வியாபாரிகள் சிண்டிகேட் அமைத்துக் கொண்டு அடிமாட்டு விலைக்கு விவசாயிகளிடம் பருத்தி கொள்முதல் செய்யும் நிலை உள்ளது.
தமிழக அரசே கொள்முதல் செய்து ஆலைகளுக்கு வழங்கிடுக!
தமிழ்நாடு முதலமைச்சர், பருத்தி கொள்முதல் செய்வது குறித்து பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளதை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் வரவேற்கிறோம். இந்திய பருத்தி கழகம் தமிழ்நாட்டில் பருத்தி யை உரிய நேரத்தில் கொள்முதல் செய்யாத நிலையில் விவசாயிக ளுக்கு ஏற்படும் இழப்பை தடுத்திடும் வகையில் தமிழ்நாடு அரசே பருத்தி யை கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதில் கொள்முதல் செய் யப்படும் பருத்தியை தமிழ்நாட்டில் உள்ள பஞ்சாலைகள், நூற்பாலை களுக்கு வழங்கிட நடவடிக்கைகளை மேற்கொண்டால் பருத்தி விவசாயிக ளை பாதுகாத்திட முடியும். எனவே, இது குறித்து தமிழ்நாடு அரசு உரிய முறையில் பரிசீலிக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.