சென்னை, செப்.7- கால்நடை மருத்துவமனைகளின் வேலை நேரத்தை மாற்றும் ஆலோசனையை அரசு கைவிட வேண்டும் என்று அரசுக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் பெ.சண்முகம் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத்துறை கால்நடை மருத்துவ நிலையங்களில் வேலை நாட்களில் வேலை நேரத்தினை காலை 8 மணி முதல் 2 மணி வரையிலும் ஞாயிற்றுக்கிழமை மற்றும் விடுமுறை நாட்களில் காலை 8 மணி முதல் பிற்பகல் 12 மணி வரையிலும் மாற்றி அமைப்பது குறித்து கருத்துக்கேட்பு கூட்டங் கள் நடத்திடவும் மற்றும் கடிதங்கள் பெற்றி டவும், 9.9.2022-க்குள் நடத்தி பரிந்துரைகளை அனுப்பிட மண்டல இணை இயக்குநர்களை துறையின் சார்பில் கேட்டுக் கொண்டுள்ளனர். தமிழகத்தில் விவசாயிகள், குறிப்பாக சிறு குறு விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலா ளர்களின் வாழ்வாதாரமாகவும், கிராமப் பொரு ளாதாரத்தின் அடிப்படைகளில் ஒன்றாகவும் கால்நடைவளர்ப்பு இருந்து வருகிறது. சிறு-குறு விவசாயிகள் தங்கள் நிலங்களில் விவசாயப் பணிகளை மேற்கொள்வதுடன் அரு காமையில் உள்ள நிலங்களுக்கு விவசாயப் பணிகளுக்கு செல்பவர்களாக உள்ளனர். விவ சாயத் தொழிலாளர்களும் விவசாய வேலைக்கு காலை 7 மணிக்கு சென்றுவிட்டு மதியம் 2 மணிக்கு வீடு திரும்பும் நிலை உள்ளது. அதன் பின் தான் தாங்கள் வளர்க்கும் கால்நடை களை பராமரிக்கும் பணிகளை மேற்கொள்கின் றனர். இந்நிலையில் காலை 8 மணி முதல் 2 மணி வரை வேலை நேரம் என்று மாற்றுவது கால்நடை மருத்துவ நிலையங்களின் பயன் பாடு எவ்வித பயனும் இல்லாததாக மாறி விடும்.
ஆய்வுப்பணிகள், அவசர சிகிச்சை, விரி வாக்கப்பணிகள், திட்டப்பணிகள், ஆய்வு கூட்டங்கள் ஆகியவற்றில் பங்கெடுக்க மருத்து வர்கள் சென்றாலும் அல்லது பராமரிப்பு உதவி யாளர்கள், ஆய்வாளர்கள் சென்றாலும் மாலை 3 மணி முதல் 5 மணி வரை யாராவது ஓரிருவர் சென்றாலும் மற்றவர்கள் மருத்துவமனையில் இருப்பது முதலுதவி போன்ற உதவிகளை செய்யப் பயன்படும். மதியம் 2 மணியுடன் வேலை நேரம் முடிவ டைவதால் மறுநாள் காலை 8 மணிவரை அதா வது 18 மணி நேரம் இடைவெளியில் எவ்வித கால்நடை மருத்துவ வசதியும் கிடைக்காது என்பது கால்நடை வளர்ப்போரையும், பால் உற்பத்தியாளர்களையும் பெரும் பாதிப்புக் குள்ளாக்கும். கலப்பின கால்நடைகள் அதிகமாக உள்ள சூழ்நிலையில் அடிக்கடி நோய்தாக்குதல் ஏற் படும் நிலையுள்ளது. கலப்பின கால்நடைகள் கிடையிலே (செட்டில்) கட்டி வளர்க்கும் நிலை யில் மருத்துவமனைக்கு அழைத்து வராம லேயே மருத்துவர்கள், ஊழியர்கள் அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்கும் நிலை உள்ளது. அவசர தேவைகளுக்கு தற்போதே அதிக செலவு செய்து தனியார் மருத்துவர்களை நாடும் நிலை உள்ளது. ஆகவே, தற்போது கால்நடை மருத்துவ நிலையங்களில் உள்ள வேலை நாட்களின் வேலை நேரம் காலை 8 முதல் 12 மணி வரை, மதியம் 3 மணி முதல் 5 மணி வரையிலும் ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் காலை 8 மணி முதல் 12 மணி வரை வேலை நேரமாக உள்ளதை எந்த காரணத்தைக் கொண்டும் மாற்றக் கூடாது என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தமிழ் நாடு அரசைக் கேட்டுக் கொள்கிறது. வேலை நேர மாற்றம் குறித்து இதுவரை கருத்துக் கேட்பது எங்கேயும் நடைபெறவில்லை. எனவே, செப்டம்பர் 9 ஆம் தேதிக்குள் இது குறித்து அறிக்கை அனுப்ப வேண்டுமென்று வற்புறுத்தி இருப்பது சரியல்ல என்பதை சுட்டிக்காட்டுகிறோம். ஆகவே, உரிய கால அவகாசம் கொடுத்து விவசாயிகள், பால் உற்பத்தியாளர்களிடம் கருத்துக்கேட்பு கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும்.
நடமாடும் மருத்துவ வாகனங்களை அதிகப்படுத்துக!
மேலும், அவசரத் தேவைகளுக்காக நட மாடும் மருத்துவ வாகனங்கள் போன் எண்: 1968 அழைத்தால் வரும் என்ற சேவை போது மான அளவில் இல்லை. அதை அதிகப்படுத்த வும், அதற்குரிய பணியாளர்களை நியமிக்க வும், மருத்துவமனைக்கு போதுமான மருந்து கள், உபகரணங்கள் வழங்கிடவும், முதலு தவி சிகிச்சைகள் கால்நடை வளர்ப்போருக்கு அளித்திடுவது உட்பட கால்நடை பராமரிப்புத் துறை இன்றைய தேவைக்கேற்ப செயல்பட உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.