states

குளத்தில் கார் கவிழ்ந்து எட்டு பேர் பலி

பூர்னியா, (பீகார்) ஜூன் 11- பீகாரில் கார் ஒன்று குளத்தில் கவிழ்ந்ததில் எட்டு பேர் உயிரிழந்தனர். பீகாரின் பூர்னியா மாவட்டத்தில் உள்ள தரபாடியில் இருந்து கார் கிஷான்கஞ்ச் மாவட்டம் நானியா கிராமத்திற்கு சென்றது. இந்தக் காரில் பயணித்தவர்கள் திருமண நிகழ்விற்கு சென்று கொண்டிருந்துள்ள னர். இந்தக் கார் சனிக்கிழமை அதிகாலை 3.30 மணியளவில் பூர்னியா-கிஷன்கஞ்ச் சாலை யில் கன்ஜியா என்ற இடத்தில்  கட்டுப்பாட்டை இழந்து குளத்திற்குள் கவிழ்ந்தது. இதில் எட்டு பேர் உயிரிழந்தனர். இருவர் உயிருடன் மீட்கப்பட்டனர்.