2022-23 இந்தியாவின் ஜிடிபி 6.5 சதவிகிதமாகவே இருக்கும்!
3வது முறையாக கணிப்பை குறைத்தது உலக வங்கி
புதுதில்லி, அக். 7 - 2022- 23 நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.5 சதவிகிதமாகவே இருக்கும் என்று உலக வங்கி கணித்துள்ளது. உலக வங்கி கடந்த ஜூன் மாதம் வெளி யிட்டிருந்த கணிப்பை விடவும், இது 1 சதவிகிதம் குறைவாகும். சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் ஆண்டுக் கூட்டத்திற்கு முன்னதாக வியாழக்கிழமை தெற்காசிய பொருளாதார அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் உலக நாடுகளை விட இந்தியா சிறப்பான வளர்ச்சியை கண்டு வருவதாக உலக வங்கி குறிப்பிட்டுள்ளது. எனினும், கடந்த ஜூன் மாதத்தில், இந்தியாவின் 2022-23 நிதியாண்டிற்கான பொருளாதார வளர்ச்சி 7.5 சதவிகிதமாக கணிக்கப்பட்டிருந்த நிலையில், அது அக்டோபர் மாதம் வெளியான கணிப்பில் 1 சத விகிதம் குறைத்து 6.5 சதவிகிதமாக கணிக்கப் பட்டுள்ளது. சர்வதேச சூழல் மோசமடைந்து வருவது, நிச்சயமற்ற தன்மை மற்றும் அதிக நிதிச் செலவுகள், தனியார் முதலீட்டு வளர்ச்சி குறைவதற்கான வாய்ப்பு ஆகியவற்றின் காரணமாக, நடப்பு நிதியாண்டுக்கான இந்தியா வின் பொருளாதார வளர்ச்சியை குறைத்து அறிவித்துள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. 2022 - 2023 நிதியாண்டில் மட்டும் இந்தியா விற்கான ஜிடிபி வளர்ச்சிக் கணிப்பை உலக வங்கி மூன்றாவது முறையாக திருத்தம் செய்துள்ளது.
இந்தியாவின் பொருளாதாரம் மோசமான நிலையிலேயே உள்ளது!
இதனிடையே, தெற்காசியாவுக்கான உலக வங்கியின் தலைமைப் பொருளாதார நிபுணர் ஹான்ஸ் டிம்மர் செய்தியாளர்களுக்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், “தெற்காசியாவில் உள்ள மற்ற நாடு களுடன் ஒப்பிடும்போது இந்தியாவின் பொருளா தாரம் சிறப்பாக உள்ளது” என்று தெரிவித்துள் ளார். அதேநேரம், “நாம் ஒப்பீட்டளவில் சாதகமான வளர்ச்சி விகிதத்தைப் பார்த்தாலும், இது பொருளாதாரத்தின் ஒரு சிறிய பகுதியால் மட்டுமே ஏற்பட்டுள்ள வளர்ச்சியாகும். உண்மையில் வளர்ச்சி என்பது மிகவும் பரந்த தளத்தில் இருந்து வரவில்லை என்றால், அந்த வளர்ச்சி விகிதம் ஒப்பீட்டளவில் சிறியது. அனைத்து குடும்பங்களின் வருமானத்திலும் ஏற்பட்டுள்ள வளர்ச்சியாக கூற முடியாது” என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், “இந்தியா இன்னும் கடுமை யான நிலையில்தான் உள்ளது” என்று கூறியுள்ள டிம்மர், “சில முக்கிய பிரச்சனை களுக்கு இந்தியா தீர்வு காண வேண்டும். விலைவாசி உயர்வைக் கட்டுக்குள் கொண்டுவர வேண்டும். சமூக பாதுகாப்பு முறையை விரிவு படுத்த வேண்டும்; மக்களுக்கு வருமானம் ஈட்டு வதற்கான வழிகள் வழங்கப்பட வேண்டும்” என்றும் வலியுறுத்தியுள்ளார்.
புதுதில்லி, அக். 7 - உலகப் பொருளாதாரம் தீவிர நெருக்க டியை நோக்கி நகர்ந்து வருவதாக சர்வ தேச நாணய நிதியம் (IMF) அபாயச்சங்கு ஊதியுள்ளது. இந்த ஆபத்தை தடுப்பதற்கு உடனடியாக கொள்கைகள், நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் ஐஎம்எப் கூறியுள்ளது. 2023-ஆம் ஆண்டின் முதல் காலாண்டு க்குள் அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகள் பொருளாதார மந்த நிலைக்குள் சென்றுவிடும் என ஏற்கனவே கணிப்புகள் வெளியாகி வந்தன. 2008-இல் ஏற்பட்ட சர்வதேச நிதிநெருக்க டியை விடவும், 2020 காலத்தில் கொரோனா தொற்று மூலம் ஏற்பட்ட மந்த நிலையை விட வும், வரவுள்ள பொருளாதார மந்த நிலை மோசமாக இருக்கும் என அந்த கணிப்பு களில் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுவந்தன.
புதுதில்லி, அக். 7 - உலகப் பொருளாதாரம் தீவிர நெருக்க டியை நோக்கி நகர்ந்து வருவதாக சர்வ தேச நாணய நிதியம் (IMF) அபாயச்சங்கு ஊதியுள்ளது. இந்த ஆபத்தை தடுப்பதற்கு உடனடியாக கொள்கைகள், நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் ஐஎம்எப் கூறியுள்ளது. 2023-ஆம் ஆண்டின் முதல் காலாண்டு க்குள் அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகள் பொருளாதார மந்த நிலைக்குள் சென்றுவிடும் என ஏற்கனவே கணிப்புகள் வெளியாகி வந்தன. 2008-இல் ஏற்பட்ட சர்வதேச நிதிநெருக்க டியை விடவும், 2020 காலத்தில் கொரோனா தொற்று மூலம் ஏற்பட்ட மந்த நிலையை விட வும், வரவுள்ள பொருளாதார மந்த நிலை மோசமாக இருக்கும் என அந்த கணிப்பு களில் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுவந்தன.
“உலகப் பொருளாதாரமே அடிப் படையில் பெரும் மாற்றத்தை சந்திப் பதை பார்க்கிறோம். கணிக்கப்படக் கூடியதாக இருந்த உலகப் பொருளாதா ரம் இப்போது பலவீனமாகவும், அதிக ஏற்ற இறக்கங்களுடனும், அரசியல் மோதல்களாலும், இயற்கை பேரழிவு களாலும் மாறிவிட்டது. ஐரோப்பா, சீனா, அமெரிக்கா ஆகிய உலகின் அனைத்து பெரிய பொருளாதாரங்களின் வேகமும் இப்போது குறைந்துவிட்டது. வளர்ந்து வரும் பொருளாதாரங்களிலும் ஏற்று மதிக்கான கிராக்கி குறைந்துவிட்டது. வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் ஏற்கெனவே உணவுப் பொருட்கள் மற்றும் எரிபொருட்களின் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது.
ரஷ்யா - உக்ரைன் போருக்கு பின் ரஷ்யாவை ஆதரிக்கும் நாடுகள், ரஷ்யாவை எதிர்க்கும் நாடுகள் என உலகம் இரு தரப்புகளாக பிரிந்துள் ளது. உலகம் இப்படி உடைவதற்கு அனுமதிக்க முடியாது. இதேபோன்ற நிலை தொடர்ந்தால், பணக்கார நாடு களில் உள்ள ஏழை மக்களும், ஏழை நாடுகளுமே அதிகம் பாதிக்கப்படு வார்கள்” என்று கிறிஸ்டலினா ஜார்ஜீவா தெரிவித்துள்ளார். முன்னதாக ஐஎம்எப் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது. அதில், 2023-ஆம் ஆண்டுக்கான உலக பொருளாதார வளர்ச்சி அளவீட்டை, குறைத்துள்ளது. 2022-ஆம் ஆண்டில் உலகப் பொருளாதாரம் 3.2 சதவிகிதம் மட்டுமே வளர்ச்சி அடையும் என்றும், 2023 ஆம் ஆண்டில் 2.9 சதவிகிதம் மட்டுமே வளர்ச்சி அடையும் என்றும் ஐஎம்எப் கணித்துள்ளது. உலகப் பொருளாதார வளர்ச்சி அளவீட்டை சர்வதேச நாணய நிதியம் ஏற்கனவே 3 முறை குறைத்துள்ள நிலையில், தற்போது 4-ஆவது முறை யாகக் குறைத்துள்ளது. அதுமட்டும் அல்லாமல் 2026 வரை யிலான காலகட்டத்தில் சர்வதேச பொருளாதாரத்தின் மதிப்பிலும் 4 டிரில்லியன் டாலரை குறைத்துள்ளது. உலகப் பொருளாதாரத்தில் மூன்றில் ஒரு பங்கை வைத்திருக்கும் நாடுகள் அடுத்த இரண்டு காலாண்டு களுக்கு தொடர்ந்து பொருளாதார சரிவை சந்திப்பார்கள். பொருளாதாரம் வளர்ச்சி பெற்றாலும் கூட அது பொ ருளாதார நெருக்கடியை போல தோன்றும். மக்களின் உண்மையான வருமானம் குறைந்து, விலைவாசி உயர்வதே அதற்கு காரணம் என்றும் ஐஎம்எப் குறிப்பிட்டுள்ளது.
2030-க்குள் வறுமையை ஒழிக்க வாய்ப்பில்லை: உலக வங்கி
இதனிடையே, 2030-க்குள் வறுமை யை முடிவுக்குக் கொண்டு வருவ தற்கு உலக நாடுகள் இலக்கு நிர்ண யித்திருந்த நிலையில், அந்த நீண்ட கால இலக்கை 2030-க்குள் உலக நாடுகள் எட்டுவதற்கு வாய்ப்பில்லை என்று உலக வங்கி தெரிவித்துள்ளது. உலக வங்கியின் தலைவர் டேவிட் மால்பஸ் வெளியிட்டுள்ள செய்தி யில், “574 மில்லியன் (சுமார் 57 கோடி) மக்கள் அல்லது உலக மக்கள் தொகையில் சுமார் 7 சதவிகிதம் பேர், 2030-ஆம் ஆண்டில்- பெரும்பாலும் ஆப்பிரிக்காவில்- அதே வருமான மட்டத்தில் வாழ்ந்து வருகின்றனர். ஆப்பிரிக்காவில் தீவிர வறுமைத் தன்மை உள்ளது. உலக வறுமையில் சுமார் 35 சதவிகிதத்தை ஆப்பிரிக்கா கொண்டுள்ளது மற்றும் தீவிர வறுமை யில் 60 சதவிகிதத்தை ஆப்பிரிக்கா கொண்டிருக்கிறது. கொரோனா தொற்றுநோய்களின் போது 40 சதவிகித ஏழை மக்கள் சராசரி யாக 4 சதவிகிதம் வருவாய் இழப்பை சந்தித்தனர். இது பணக்காரர்களான 20 சதவிகிதம் பேர் சந்தித்த இழப்புக ளை விட இரண்டு மடங்கு அதிகம். கொரோனா பெருந்தொற்று உலகம் முழுவதும் -ஏற்படுத்திய தாக்கம் காரணமாக, 2020-இல் 71 மில்லியன் (சுமார் 7 கோடி) மக்கள் தீவிர வறு மையில் வாழ்ந்து வருகின்றனர். 719 மில்லியன் (சுமார் 72 கோடி) அல்லது உலக மக்கள் தொகையில் சுமார் 9.3 சதவிகிதம் பேர் ஒரு நாளைக்கு 2.15 டாலர் மட்டுமே செலவு செய்து வாழ்கின்றனர். எனவே, 2030 ஆம் ஆண்டுக்குள் வறுமையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான நீண்டகால இலக்கை உலகம் அடைய வாய்ப்பில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.
60 கோடி பேர் வறுமையில் தள்ளப்படும் அபாயம்!
உலக வங்கியின் பொருளாதார நிபுணர் இண்டர்மிட் ஜில் வெளி யிட்டுள்ள ஆய்வறிக்கையில், “இந்தி யாவில் கொரோனா பிரச்சனை காரண மாக கடந்த 2020-ஆம் ஆண்டு மட்டும் சுமார் 5.6 கோடி பேர் வறுமை நிலை க்கு தள்ளப்பட்டனர். இந்த எண்ணிக்கை இனி வரும் ஆண்டுகளில் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. உலகளாவிய வறுமை நிலையும் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்த படியே உள்ளது. 2030-ஆம் ஆண்டிற்குள் உலகம் முழுவதும் 60 கோடிப் பேர் வறுமையில் தள்ளப்படும் அபாயம் உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.