_ சிறிய அணிகளில் இருப்பவர்கள் பெரும்பாலும் இளம் வீரர்கள் (20 வயதிற்குள்)
_ வயதிற்கு ஏற்ப இளம் வீரர்கள் குதிரை வேகத்தில் மைதானத்தில் ஓடுவது, தடுப்பாட்டத்தில் சண்டை செய்யும் அளவிற்கு மோதுவது
_ பயிற்சியாளர் கூறும் உத்தரவுகளை வடிகட்டாமல் அப்படியே உள்வாங்குவது. (சீனியர் அணிகளில் சில வீரர்கள் பயிற்சியாளர்கள் கூறுவதை தலையில் அல்ல, காதில் கூட போட்டுக்கொள்ளமாட்டார்கள்)
_ எங்களுக்கு கோப்பை கிடைக்காது. ஆனால் கடந்த சீசனை விட நடப்பு சீசனில் ஒரு படி முன்னேறுவோம் என்ற மனநிலையில் விளையாடுவது.
_ பதற்றம் இல்லாமல் இருப்பது (சீனியர் அணிகள் கோப்பை, அடுத்த சுற்று பற்றிய கவலையில் பதற்றத்துடன் இருப்பார்கள்)
_ நாங்கள் பெரிய அணிகளுடன் மோதுகிறோம் என்ற எண்ணத்துடன் இந்த இளம் வீரர்கள் வியூகம் அமைப்பது
_ பெரிய அணிகளை எதிர்கொள்ள முரட்டு மனநிலையில் களமிறங்குவது
_ கோலடித்துதான் பார்ப்போமே “இளம் கன்று பயமறியாது” என்பது போல அதிரடி முயற்சியில் களமிறங்குவது
_ பெரிய அணிகளுக்கு எளிதாக வியூகம் அமைக்கலாம். காரணம் அவர்களின் ஆட்டத்திறன் கால்பந்து உலகிற்கு நன்கு தெரியும். ஆனால் சிறிய அணிகளின் ஆட்டத்திறன் அனுபவம் இல்லாததால் இளம் அணிகளுக்கு வியூகம் அமைக்க முடியாமல் கடுமையாக திணறுகிறது சீனியர் நாடுகள்
_ இந்த அணி நம்மை வீழ்த்தி விடுமோ என்ற செருக்கான மனநிலையில் பெரிய அணிகள் விளையாடுவது
_ இது சிறிய அணி தானே என நட்சத்திர வீரர்களுக்கு ஓய்வு அளிப்பது இப்படி பல்வேறு சம்பவங்களால் ஜுனியர் அணிகளிடம் பலம்வாய்ந்த சீனியர் நாடுகள் மண்ணை கவ்வுகின்றன.