கிங்ஸ்டன், ஜூன் 1- அமெரிக்க நாடுகளின் உச்சிமாநாட்டில் பங்கேற்க வேண்டாம் என்று கரீபிய நாடுகளுக்கு செயின்ட் வின்சென்ட் மற்றும் கிரெனாடின்ஸ் நாட்டின் பிரதமர் ரால்ப் கொன்சால்வஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். அமெரிக்காவின் வாஷிங் டன் நகரில் நடைபெறவிருக் கும் அமெரிக்க நாடுகளின் உச்சிமாநாட்டில் கலந்து கொள்ள கியூபா, வெனிசுலா, நிகரகுவா ஆகிய நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இதற்கு தென் அமெரிக்க நாடுகள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்திருக்கிறது. இந்நிலையில், கரீபிய நாடான செயின்ட் வின்சென்ட்டும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அதோடு, மூன்று நாடுகளை அழைக்காததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மற்ற கரீபிய நாடுகளும் அந்த மாநாட்டில் பங்கேற்க வேண்டாம் என்று வலியுறுத்தியிருக்கிறது. தனது அந்தஸ்தைக் குறைத்துக் கொள்ளும் வழியில் அமெரிக்கா செல்ல வேண்டாம் என்று சில அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களே கோரியிருக்கிறார்கள்.