states

மணிப்பூர் வன்முறை குறித்து சர்ச்சை கருத்து: பத்ரி சேஷாத்ரி கைது

சென்னை, ஜூலை 29- மணிப்பூர் வன்முறை தொடர் பாக உச்ச நீதிமன்ற தலைமை நீதி பதியை விமர்சித்த விவகாரத்தில் வலதுசாரி ஆதரவாளரும், பதிப் பாளரும், பேச்சாளருமான பத்ரி சேஷாத்ரி கைது செய்யப்பட்டார்.  பெரம்பலூரைச் சேர்ந்த வழக் கறிஞர் கவியரசு அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் சனிக்கிழமை (ஜூலை 29) பத்ரி சேஷாத்ரியை கைது செய்தனர். பத்ரி சேஷாத்ரி பேசியது என்ன? மணிப்பூர் வன்முறைக்கு அம்மா நில உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புதான் காரணம் என்று மணிப் பூர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் கருத்து கூறியுள்ளது. இதில் தலைமை நீதிபதி சந்திரசூட் என்ன  செய்ய முடியும்? உச்ச நீதிமன்ற  தலைமை நீதிபதியிடம் துப்பாக்கி யைக் கொடுத்து மணிப்பூர் அனுப்பி  வைக்கலாம் என்று ஒரு தொலைக் காட்சி  விவாதத்தில் அவர்  பேசியிருந்தார். இதுகுறித்து பெரம்பலூரைச் சேர்ந்த வழக்கறிஞர் கவியரசு அளித்த புகாரின் பேரில் பெரம்ப லூர் காவல்துறையினர் அவரை சனிக்கிழமை (ஜூலை 29) சென்னை யில் வைத்து கைது செய்தனர். மேலும், பத்ரி சேஷாத்ரி மீது குன்னம்  காவல் துறையினர் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.