states

சாலைப் பணிகளை தாமதம் செய்யாதீர்!

சென்னை, ஜூலை 3- வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாக, நிலு வையில் உள்ள சாலை மற்றும் பாலப் பணிகளை முடிக்க அதி காரிகளுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாட்டில் நடைபெறும் சாலை மற்றும் பாலப் பணிகள் முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம் திங்களன்று (ஜூலை 3)  தலைமைச் செயலகத்தில் நடை பெற்றது. இந்தக் கூட்டத்தில் முத லமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசிய தாவது: தொழிற்சாலைகளுக்கான உள்கட்டமைப்பில் அரசு அதிக கவனம் செலுத்தி வருவதால், பன் னாட்டுத் தொழில் நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க ஆர்வம் காட்டி வருகின்றன. தொழிற்சாலைகளுக்கு உகந்த  சூழ்நிலைகளான இடம் கையகப் படுத்தல், போக்குவரத்து வசதி, ஏற்றுமதிக்கான வசதிகள், உள் கட்டமைப்புகள் உருவாக்குதல் உள்ளிட்ட பல்வேறு சவால்களை அரசு எதிர்கொள்கிறது. இருப்பி னும், அவற்றை சமாளித்து உலக ளாவிய நிறுவனங்கள் தொழில் களை தொடங்கவும், அதற்கான முதலீடுகளைப் பெறவும் செயல்படுகிறோம். இதன் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக  தொழில் முதலீடுகள் குவிகின்றன. ஏற் கனவே, 5 பில்லியன் டாலர் அள வுக்கு தொழில் முதலீடுகளுக்கு உத்தரவாதம் தரப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழகம் தொழில் துறையில் எதிர்பார்த்த முதலீட்டை வெகு விரைவில் அடைந்துவிடும் என்று நாளேடுகள் தலையங்கம் வெளியிட்டுள்ளன. மாநில நலனுக்கும், சீரான பயணங்களுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் சாலை களும், பாலங்களும் தவிர்க்க இய லாது. கடந்த மே 10 அன்று நடை பெற்ற கூட்டத்திற்கு பிறகு பல பணிகளில் முன்னேற்றமும், குறிப் பிட்ட சில இடங்களில் தொடர்ந்து தொய்வும் உள்ளது.

சாலை, பாலப் பணிகளும் நடை பெறும்போது போக்குவரத்து நெரி சல் உள்ளிட்ட சிரமங்களை மக்கள் சந்திக்கின்றனர். இருப்பினும், இத்தகைய பணிகளை உரிய காலத்திற்குள் முடிக்க வேண்டும். இன்றைய கூட்டத்தில் ஆய்வு செய்த பணிகளுக்கெல்லாம் போது மான நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. தாமதத்துக்கு பொது வான காரணம், நில எடுப்பு மற்றும் துறைகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்பில் ஏற்படும் பிரச்சனைகள்தான். இத்தகைய பிரச்சனைகளுக்கு உடனடித் தீர்வு காண தலைமைச் செயலாளர், துறைச் செயலாளர்களுடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு மேற்கொண்ட நட வடிக்கையின் காரணமாக, சென்னை சாலைகள் எத்தகைய இயற்கை பேரிடர்களையும் தாங்கக் கூடிய அளவிற்கு, கட்டமைப்புப் பெற்றதாக மாறியுள்ளது. இதற்கு அடிப்படைக் காரணம் துறைகளுக் கிடையேயான ஒருங்கிணைப்பும், தொடர்ச்சியான ஆய்வுகளும் தான். இந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழை தொடங்குவதற்கு முன்பாக, நிலுவையில் உள்ள சாலை மற்றும் பாலப் பணிகளை முடித்திட வேண்டும். அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு, நிர்ணயிக்கப்பட்ட காலக்கட்டத்துக்குள் அனைத்துப் பணிகளையும் விரைவில் முடிக்க வேண்டும். விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பில் உள்ள பாலங்கள் மற்றும் புறவழிச்சாலை பணி களை விரைந்து செயல்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிடவேண்டும். நில எடுப்பு பணிகளில் சம்பந்தப் பட்ட துறைகளோடு வருவாய்த் துறையும் இணைந்து பணியாற்ற வேண்டும்.  இவ்வாறு அவர் பேசினார். 

;