சென்னை, ஏப்.2- தமிழகத்தில் அதிமுக-பாஜக கூட்டணி மிக வலிமை யாக உள்ளதாக ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார். சென்னையில் உள்ள பாஜக அலுவலகத்தில் நாடா ளுமன்ற தேர்தல் குறித்து ஞாயிறன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், கலந்து கொண்ட ஒன் றிய இணை அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசு கையில், ‘‘அதிமுக-பாஜக இடையிலான கூட்டணி வலுவாக உள்ளது. அதிமுக-பாஜக கூட்டணியில் எந்த பிரச்சனையுமில்லை. கூட் டணி தொடர்கிறது எனவும், கூட்டணி குறித்து நிர்வாகி கள் மத்தியில் அண்ணா மலை பேசியதில் எந்த சர்ச்சையும் இல்லை’’ என்று விளக்கமளித்துள்ளார்.