states

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒரு இடம்

சிம்லா, மே 4 - இமாச்சலப்பிரதேச மாநிலத்தின் தலை நகரமும், நாட்டின் முக்கிய சுற்றுலா தலமு மான சிம்லா மாநகராட்சிக்கான வாக்குப் பதிவு கடந்த செவ்வாய்க்கிழமை நடை பெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்கு வியாழக்கிழமை எண்ணப்பட்டது. வாக்கு எண்ணிக்கையின் முதல் சுற்றிலிருந்தே முன்னிலையில் இருந்த காங்கிரஸ் கட்சி  மொத்தமுள்ள 34 இடங்களில் 24 இடங்களைக் கைப்பற்றியுள்ளது.  பாஜக வெறும் 9 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்) ஒரு இடத்திலும் வெற்றி பெற்றது. சிம்லா மாநகராட்சி கடந்த 10 ஆண்டுகளாக பாஜக வசமிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.