முதலீட்டாளர்களிடம் ரூ.6,300 கோடி மோசடி; இந்திய அதிகாரிகளுக்கு ரூ.2029 கோடி லஞ்சம்
அதானிக்கு பிடிவாரண்ட்!
நியூயார்க், நவ. 21 - அமெரிக்காவின் பாதுகாப்பு, அய லுறவு, ஊழல் தடுப்புச் சட்டங்களை மீறியும், முதலீட்டாளர்கள் மற்றும் கடன் நிறுவனங்களை ஏமாற்றியும் அதானி குழுமம் ரூ. 6 ஆயிரத்து 300 கோடி (750 மில்லியன் டாலர்) அளவிற்கு மோசடியை அரங்கேற்றி யிருப்பதாக அமெரிக்கா பரபரப்புக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. முன்னதாக இந்த முதலீடுகளைப் பெறுவதற்காக, அதானி குழுமமானது, இந்திய அதிகாரிகளுக்கு ரூ. 2,029 கோடி (260 மில்லியன் டாலர்) அளவிற்கு லஞ்சம் கொடுத்திருப்பதாக வும் அமெரிக்கா கூறியுள்ளது. அமெரிக்கப் பங்குச்சந்தை கண்காணிப்பு அமைப்பான பத்திரங் கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் இதுதொடர்பாக நியூயார்க் நீதி மன்றத்தில் தொடர்ந்த வழக்கில், அதானி குழுமம் தொடர்புடைய 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, இவர் களில் அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி, மருமகன் சாகர் அதானி ஆகியோருக்கு பிடிவாரண்ட்டும் பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அமெரிக்காவின் குற்றச்சாட்டு மற்றும் அந்நாட்டு நீதிமன்றத்தின் பிடி வாரண்ட் நடவடிக்கை உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி யுள்ளது.
மாநிலங்களுக்கு சூரிய ஒளி மின்சாரம்
2021 ஜூலை மற்றும் 2022 பிப்ரவரி இடையேயான காலகட்டத்தில், ஒடிசா, தமிழ்நாடு, ஜம்மு - காஷ்மீர், சத்தீஸ்கர் மற்றும் ஆந்திரப் பிரதேச மாநிலங்களில் சூரிய ஒளி மின்சார விநியோக ஒப்பந்தங்களை பெறுவது அதானி குழுமத்தின் திட்டமாகும். அவ்வாறு ஒப்பந்தங்கள் கிடைத்தால், அடுத்த 20 ஆண்டுகளில் சுமார் 16 ஆயிரத்து 800 கோடி ரூபாய் (2 பில்லி யன் டாலர்) அதானி குழுமத்திற்கு லாபமாக கிடைக்கும். எனவே, இந்த ஒப்பந்தங்களைப் பெறுவதற்கு உரிய முதலீட்டை அமெரிக்க முதலீட்டாளர்கள் மற்றும் கடன் நிறுவனங்களிடமிருந்து திரட்டு வதற்கு அதானி குழுமம் முடிவுசெய்தது. அதன்படியே அதானி குழுமத்தின் துணை நிறுவனமான, அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம் மொத்தம் 6,375 கோடி ரூபாய்க்கும் (750 மில்லியன் டாலர்கள்) அதிகமான தொகையை முதலீடுகளாகப் பெற்றுள்ளது.
பங்குச்சந்தைகளில் நிதி திரட்டல்
அமெரிக்கப் பங்குச் சந்தையில் இருந்த அஜுர் பவர் நிறுவனம் மற்றும் அமெரிக்க முதலீட்டாளர்களிடம் இருந்து மட்டும் சுமார் 1,400 கோடி ரூபாய்க்கும் (175 மில்லியன் டாலர்) அதிகமாக அதானி பெற்றுள்ளார் என்கிறது, அமெரிக்கப் பங்குச் சந்தை கண்காணிப்பு அமைப்பு. முன்னதாக, இந்த முதலீட்டைத் திரட்டுவதற்காக அதானி குழுமம், 2020 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில் இந்திய அதிகாரிகளுக்கு ரூ. 2,029 கோடி வரை லஞ்சம் கொடுத்துள்ளது. லஞ்சம் கொடுப்பதற்கும் அமெரிக்கர்களின் பணத்தை அதானி பயன்படுத்தியுள் ளார் என அமெரிக்கப் பங்குச் சந்தை கண்காணிப்பு அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.
அரசு வழக்கறிஞர் அலுவலகம் குற்றச்சாட்டு
கிரீன் எனர்ஜி என்ற அதானியின் சூரிய ஒளி மின் உற்பத்தி நிறுவனம் மின் சார உற்பத்தி திட்டத்தை முன்னெடுப்ப தற்காக இந்திய அரசு அதிகாரி ஒருவரை சந்தித்ததாகவும், அதானியே தனிப் பட்ட முறையில் இந்த லஞ்சம் கொடுக் கும் திட்டத்தில் ஈடுபட்டதாகவும் அமெ ரிக்க அரசு வழக்கறிஞர் அலுவலகம் குற்றச்சாட்டு வைத்துள்ளது. அதானி, அவரது மருமகன் மற்றும் கூட்டாளிகள் இணைந்து தவறான தக வல்கள் மற்றும் தவறான அறிக்கை களின் அடிப்படையில் அமெரிக்க முத லீட்டாளர்கள் மற்றும் உலகளாவிய நிதி நிறுவனங்களிடமிருந்து பல கோடி மதிப்பு பணத்தை பெறுவதற்காக அமெ ரிக்காவின் பாதுகாப்பு, வெளிநாட்டு, ஊழல் நடைமுறைகள் சட்ட விதிகளை மீறி தொடர் மோசடியை அரங்கேற்றி யுள்ளனர். மேலும் லஞ்சம் கொடுக்க அமெரிக்கர்களின் பணத்தையே அதானி பயன்படுத்தியுள்ளார் என குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள் ளது.
அதானி உள்ளிட்டோர் நேரடியாக லஞ்சம்
இத்தகைய லஞ்சம் தொடர்பான வெளிநாட்டு ஊழல் நடைமுறைகள் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் அமெரிக்க பங்குச் சந்தையில் வர்த்த கம் செய்த சூரிய எரிசக்தி நிறுவனத்தின் முன்னாள் நிர்வாகிகளான ரஞ்சித் குப்தா மற்றும் ரூபேஷ் அகர்வால், பெயர் குறிப்பிடப்படாத கனடா நிறு வனத்தின் முன்னாள் ஊழியர்களான சிரில் கபேன்ஸ், சவுரப் அகர்வால் மற்றும் தீபக் மல்ஹோத்ரா ஆகி யோரும் ஈடுபட்டதாக நியூயார்க் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப் பட்டுள்ள குற்றப்பத்திரிக்கையில் தெரிவித்துள்ளனர். அதிகாரிகளுக்கு சட்டவிரோதமாக லஞ்சம் கொடுத்த நடவடிக்கையை 2020 முதல் 2024 வரை அதானியும் அவ ரது கூட்டாளிகளும் அங்கேற்றியதாக வும் இதற்காக அவர்கள் அடிக்கடி நேரடி யாக சந்தித்தும், தொலைபேசி வாயி லாகவும், மின்னஞ்சல் வாயிலாகவும் விவாதித்துள்ளனர் எனவும் அமெரிக்க அரசு வழக்கறிஞர் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மருமகனின் கைபேசியில் ஆதாரம் அதானியின் மருமகனான சாகர் அதானி தனது கைபேசியில் அரசு அதிகாரிகளுக்கு அளிக்கப்பட்ட லஞ்சம் மற்றும் வாக்குறுதி தொடர்பான விவரங்களை தொடர்ந்து கண்கா ணித்ததாகவும், வினீத் ச ஜெயின் கொடுக்க வேண்டிய பல்வேறு லஞ்சத் தொகைகளைச் சுருக்கமாகக் கூறும் குறிப்பிட்ட ஆவணத்தை புகைப்படம் எடுத்து வைத்திருந்தார்: ரூபேஷ் அகர்வால் தனது கூட்டாளிகளுக்கு (குற்றம் சாட்டப்பட்டுள்ள நபர்கள்) லஞ்சம் வழங்குவது உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு திட்டம் வகுத்து அதை பவர்பாயிண்ட் மற்றும் எக்செல் மூலமாக விளக்கியுள்ளார் எனவும் அமெரிக்க அரசு வழக்கறிஞர் அலுவலக குற்றப்பத்திரிகையில் குறிப்பிட்டுள்ளது.
அமெரிக்க பங்குச்சந்தை அமைப்பு குற்றச்சாட்டு
அமெரிக்கப் பங்குச்சந்தை கண்காணிப்பு அமைப்பான பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் தனது அதிகாரப்பூர்வ பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அமெரிக்க பாதுகாப்புச் சட்டங்களின் அடிப்படையில் அதானி குழுமம் மேற்கொண்டிருப்பது மோசடி தடுப்பு விதிகளை மீறிய குற்றமாகும். இதன் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அதானி உட்பட அனைத்து நபர்களின் மீதும் வழக்குப் பதிவு செய்வதுடன் அவர்கள் மீது நிரந்தர தடைகள் விதிப்பது, சிவில் சட்டப்படி தண்டனைகளுக்கு உட்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்” என வலியுறுத்தியுள்ளது. அதானி மற்றும் அவரது மருமகன் உள்ளிட்ட ஏழு நிர்வாகிகள், தங்கள் வணிகத்திற்கு கொழுத்த லாபத்தை தரக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்ட ஒப்பந்தங்களுக்கு இந்திய அரசு நிதி கொடுக்க வேண்டும்; அதற்காக இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்த தாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஏமாற்றிய அதானி குழும அதிகாரிகள் அதானி உள்ளிட்ட அனைவரும் தவறான தகவல்கள் மூலம் முதலீட்டாளர்களை ஏமாற்றி யுள்ளனர் எனவும், அதே நேரத்தில் அதானியுடன் குற்றம் சாட்டப்பட்டுள்ள மற்ற நிர்வாகிகள் அர சாங்கத்தின் விசாரணையைத் தடுக்க லஞ்சம் கொடுத்து சதித்திட்டத்தை மறைக்க முயன்ற தாகவும் அமெரிக்காவின் உளவுத்துறையான எப்.பி.ஐ. உதவி இயக்குநர் ஜேம்ஸ் இ. டென்னி குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து விசாரணை நடந்து வருவதாக இந்த ஆண்டு மார்ச் மாதம் ‘புளூம்பெர்க்’ ஊடகம் தெரிவித்தது. ஆனால் அதானிக்கு எதிராக இதுபோன்ற விசாரணை எதுவும் நடைபெறவில்லை என்று அதானி குழுமம் மழுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.
அதானி மீதான மோசடிப் புகார்கள்
“கரீபியன் நாடுகள், மொரீஷியஸ், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட வெளிநாடுகளில் தங்களது குடும்ப உறுப்பினர்கள் மூலம் போலி நிறுவனங்களைத் தொடங்கி வரவு - செலவுக் கணக்குகளில் மோசடி செய்ததோடு வரி ஏய்ப்பு மற்றும் சட்டவிரோத பணப் பரிமாற்றத்திலும் அதானி ஈடுபட்டுள்ளார். இந்த வகையில், அதானி குழும நிறுவனங்கள் பங்குச் சந்தை வர்த்தகத்தில் ரூ. 17 லட்சத்து 80 ஆயிரம் கோடி அளவிற்கு ஊழல் செய்துள்ளன” என்று, கடந்த 2022-ஆம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த ‘ஹிண்டன்பர்க் ரிசர்ச்’ (Hindenburg Research) என்ற ஆய்வு நிறுவனம், 106 பக்க ஆய்வறிக்கையை வெளியிட்டது. இதனால், அதானி குழுமப் பங்குகள் மொத்தமாக ரூ. 13 லட்சம் கோடி அளவுக்கு இழப்பைச்சந்தித்தன. பெரும் பணக்காரர்கள், தொழில் நிறு வனங்களின் ஊழல், சட்டவிரோத பணப்பரி மாற்றம், கறுப்புப் பண பதுக்கல் மற்றும் பங்குச் சந்தை முறைகேடு ஆகியவற்றை துப்பறிந்து ஆதாரங்களுடன் வெளியிடும் அமைப்பு ஓசிசிஆர்பி (OCCRP) ஆகும். இந்த நிறுவன மும், “அதானி தனது சொந்த பங்குகளை தானே ரகசியமாக வாங்கி பங்குச் சந்தையில் வரலாறு காணாத முறைகேடு செய்ததாக” குற்றம் சாட்டியது. இந்த வரிசையில் தற்போது அமெரிக்கப் பங்குச்சந்தை கண்காணிப்பு அமைப்பே அதானிக்கு எதிராக ஊழல் வழக்கு தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மறுக்கும் அதானி குழுமம் ஆனால், இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அதானி குழுமம், “அமெரிக்க நீதித்துறையும் அமெரிக்கப் பத்திரங்கள் மற்றும் பரிமாற்ற ஆணையமும் அதானி குழும இயக்குநர்கள் மீது முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்கள் அடிப்படை ஆதாரமற்றவை ஆகும். அந்தக் குற்றச்சாட்டுகளை நாங்கள் மறுக்கிறோம். அமெரிக்க நீதித்துறையே கூறி யுள்ளபடி இவை அனைத்தும் வெறும் குற்றச்சாட்டே ஆகும். குற்றம் நிரூபிக்கப்படும் வரை நாங்கள் நிரபராதிகள்தான்; இந்தக் குற்றம் சம்பந்தமாக அனைத்து சட்டரீதியான நடவடிக்கைகளையும் நாங்கள் எடுப்போம்” என வழக்கம் போல குறிப்பிட்டுள்ளது.
ஒரே நாளில் ரூ. 1.85 லட்சம் கோடியை இழந்த அதானி குழுமப் பங்குகள்
12 ஆயிரம் கோடியை இழந்தது எல்ஐசி
அமெரிக்கா ஊழல் குற்றம் சுமத்திய பிறகு வியாழனன்று அதானி குழுமத்தின் பங்குகள் சுமார் 2 லட்சம் கோடிகள் வரை வீழ்ச்சியைச் சந்தித்தன. மோடி அரசாங்கமானது, தனது கூட்டுக் களவாணியான அதானி மீதான விசுவாசம் காரணமாக அதானி குழுமத்தின் 7 நிறுவனப் பங்குகளில் எல்.ஐ.சி. நிறுவனத்தை முதலீடு செய்ய வைத்திருந்தது. தற்போது அதானி மீதான மோசடி குற்றச்சாட்டைத் தொடர்ந்து, அதானி குழுமப் பங்குகள் சுமார் 2 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு இழப்பைச் சந்தித்துள்ளன. அதானி குழும நிறுவனங்களில் முதலீடு செய்திருந்த எல்.ஐ.சி. நிறுவனமும் ஒரே நாளில் ரூ. 12 ஆயிரம் கோடி அளவிற்கு இழப்பைச் சந்தித்துள்ளது. இது மட்டுமின்றி அதானி குழுமத்துக்கு எஸ்.பி.ஐ., ஐசிஐசிஐ வங்கி, ஆக்சிஸ் வங்கி, யெஸ் பேங்க், இண்டஸ்இண்ட், ஐடிஎப்சி ஃபர்ஸ்ட், பாங்க் ஆப் இந்தியா உள்ளிட்ட வங்கிகள் அதானி குழுமத்துக்கு கடன் தந்துள்ள நிலையில், கடன் கொடுத்த வங்கிகளின் பங்குகள் விலையும் கடுமையாக சரிந்துள்ளன. பங்குகள் வெளியீட்டை நிறுத்திய அதானி நிறுவனம் இதனிடையே அதானி குழுமம் அதனுடைய கிரீன் எனர்ஜி லிமிடெட் நிறுவனத்தின் 600 மில்லியன் டாலர் மதிப்பிலான பங்குகள் வெளியீட்டை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.