states

மதுரை முக்கிய செய்திகள்

பழனி ஆதிதிராவிடர் நல விடுதியில் 3 மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு 5 இளைஞர்கள் கைது

பழனி, செப்.21- பழனியில் ஆதி திராவிடர் நல விடுதியில் உள்ள  3 மாணவியர்களை பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்கிய 5 இளைஞர்கள் போக்சோ சட்டத்தில் கைது செய்யப் பட்டுள்ளனர்.  பழனியில் சத்யாநகரில் ஆதி திராவிடர் நல விடுதி  செயல்பட்டு வருகிறது. பழனியை சுற்றியுள்ள ஏழை மாண வியர்கள் இந்த விடுதியில் தங்கி பயின்று வரு கிறார்கள். இங்கு தங்கியிருக்கும் 3 மாணவியர்கள் பாலி யல் தொல்லைக்கு ஆளானதாக கடந்த வாரம் புகார்  எழுந்தது. இதனையடுத்து குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய அதிகாரிகள், ஆதி திராவிட நல த்துறை  அதிகாரிகள் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட னர். ஆனால்  எந்த வழக்கும் பதியப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவர்களை கைது செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை எழுப்பி னர். இதனையடுத்து ஒரு கல்லூரி மாணவர் உட்பட  ராகுல், பரந்தாமன், கிருபாகரன், உள்ளிட்ட 5 பேர்  கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது. விடுதி காப்பாளர் அமுதா,  காவலாளி விஜயா, ஆகியோர் பணியிடை நீக்கம் செய்  யப்பட்டுள்ளனர்.

3 ஆவது நாளாக பஞ்சமி நிலத்தில் குடியேறும் போராட்டம்

ஆட்சியர் பேச்சுவார்த்தை-இன்று முதல் சர்வே பணி

ஆட்சியர் பேச்சுவார்த்தை-இன்று முதல் சர்வே பணி தேனி, செப்.21-  தேனி அருகே வடபுதுப்பட்டியில் பஞ்சமி நிலம் என கூறப்படும் நிலத்தில் 3 ஆவது நாளாக புதனன்று 50 க்கும் மேற்பட்டோர் குடிசை அமைத்து குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்  வடபுதுப்பட்டி யில் மலைக்கரடு அடிவாரத்தில் உள்ள இடத்தில் கம்புகள், தார்பாய்கள் கொண்டு தற்காலிக கூடாரம் அமைக்கப்பட்டது. அவர்கள் தொடர்ந்து அங்கு தங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்துக்கு தேனி டி.எஸ்.பி. பார்த்திபன் தலைமை யிலான போலீசார், தாசில்தார் ராணி மற்றும் வரு வாய்த்துறையினர் ஆகியோர் வந்து பேச்சு வார்த்தை நடத்தினர். வீடு இல்லாத மக்களுக்கு மாற்று இடத்தில் பட்டா வழங்குவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.  ஆனால் இதே இடத்தில்தான் பட்டா வழங்க வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர். பல ஆண்டு களாக பட்டா வழங்க வலியுறுத்தி மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். இத னைத் தொடர்ந்து இரவில் அங்கேயே தங்கிய  பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பெண்களை மட்டும் வீட்டிற்கு அனுப்பி விட்டு  ஆண்கள் அங்கேயே தூங்கினர். மலைப்பகுதி யிலேயே உணவு சமைத்து சாப்பிட்டனர்.  இந்நிலையில் மாவட்ட வருவாய் அலுவலர் சுப்பிரமணி  அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தியும் தங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை மலைப் பகுதியை விட்டு கீழே இறங்க மாட்டோம் என்று தெரி வித்தனர்.  ஆட்சியர் பேச்சுவார்த்தை ஆட்சியர் முரளிதரன் தலைமையில் போராட்டக் காரர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது.இதில் இன்று முதல் நிலம்  சர்வே பணியை துவங்கு வது என்றும் பஞ்சமி நிலமாக இருந்தால் அந்த நிலத்திற்கான பட்டாவை ரத்து செய்து, உரிய பயனாளி களுக்கு வகை மாற்றம் செய்து கொடுப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

உசிலம்பட்டி மாவட்ட  கல்வி அலுவலகம் செயல்பட நடவடிக்கை எடுக்க கோரிக்கை

மதுரை, செப்.21- உசிலம்பட்டி மாவட்ட கல்வி அலுவலகம் செயல்படு வதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் மதுரை மாவட்  டக்குழு வலியுறுத்தியுள்ளது.  இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு மதுரை மாவட்  டம் சார்பில் மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலு வலக நேர்முக உதவியாளரை சந்தித்து அரசாணை எண் 151 இன் படி 50 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பாரம்பரி யமிக்க உசிலம்பட்டி மாவட்ட கல்வி அலுவலகம் நிர்வா கம் கலைக்கப்பட்டுள்ளது. உசிலம்பட்டி பகுதியானது தாழ்த்தப்பட்ட, ஏழை எளிய, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட குழந்தைகள் அதிகமாக படிக்கும் பகு தியாகும். எனவே, மாணவர்களின் கல்வி நலன் கருதி யும், ஆசிரியர்களின் நிர்வாக சிக்கல்கள் கருதியும் தொடர்ந்து உசிலம்பட்டி மாவட்ட கல்வி அலுவலகம் செயல்படுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி மதுரை மாவட்ட இந்திய பள்ளி  ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கழக மதுரை மாவட்ட செயலாளர் சந்திரன், தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மதுரை மாவட்ட செயலாளர் கார்த்தி கேயன், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மதுரை மாவட்ட செயலாளர் சீனிவாசன், தமிழ்நாடு இடை நிலை ஆசிரியர் சங்க மதுரை மாவட்ட செயலாளர் ராஜ ரத்தினம், இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் முன்  னாள் அகில இந்திய செயலாளர் சுரேஷ் ஆகியோர் கோரிக்கை மனுவினை அளித்தனர்.

மதுரை ஆவின் பால் பாக்கெட்டில் ‘ஈ’  

மதுரை, செப்.21- மதுரை நாகமலைபுதுக்கோட்டை பகுதியில் உள்ள  ஆவின் பாலகத்தில் விற்பனை செய்யப்பட்ட பால் பாக்கெட்டில்  ஈ இருந்ததால் பால் வாங்கிய நுகர்வோர்  அதிர்ச்சி அடைந்தார். இதனைத்தொடர்ந்து பாலில் ஈ  இருப்பது குறித்த வீடியோ வெளியான நிலையில்  ஆவின் அதிகாரிகள் பால் பாக்கெட்டை திரும்பப்பெற்று விசா ரணை நடத்தி வருகின்றனர். பேக்கிங் செய்யும் போது  தவறு நடந்திருக்கலாம் எனவும் இனிமேல் இதுபோன்ற தவறு நடைபெறாது என விளக்கம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

தேனீ வளர்ப்பு செயல்விளக்கம்

திருவில்லிபுத்தூர், செப்.21- திருவில்லிபுத்தூர் வட்டாரம் இடையன்குளம் கிரா மத்தில் கி.கண்ணன் என்ற விவசாயியின் தோட்டத்தில் அட்மா விரிவாக்க சீரமைப்பு திட்டம் 2022-23ம் ஆண்டின் கீழ் முன்னுரிமையின் அடிப்படையில் தேனீ வளர்ப்பு  செயல்விளக்கத்திற்கு தேனீக்களுடன் கூடிய தேனீப் பெட்டி மற்றும் தாங்கி வழங்கப்பட்டு தேனீவளர்ப்பு செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. திரு வில்லிபுத்தூர், வேளாண்மை உதவி இயக்குநர் ச.அசோ கன் தலைமை தாங்கி தேனீக்களின் வகைகள், தேனீப் பெட்டி வைக்கும் முறை, தேனீக்கள் பராமரிப்பு, தேன்  எடுக்கும் தொழில்நுட்பம், வேளாண்மை மற்றும் மனி தர்களின் வாழ்வில்  தேனீக்களின் பங்கு குறித்தும் விரி வாக விளக்கினார். அதனை தொடர்ந்து தேனீ வளர்ப்பில்  கிடைக்கும் கூடுதல் வருமானம் பற்றி துணை வேளா ண்மை அலுவலர் கு.அம்மையப்பன் எடுத்துரைத்தார். இதில் விவசாயிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

பேருந்தில் மூதாட்டியிடம்  8 பவுன் நகை பறிப்பு

விருதுநகர், செப்.21- விருதுநகர் அருகே உள்ள பெரியதாதம்பட்டியைச் சேர்ந்தவர் சுப்புலட்சுமி (68). இவர் விருதுநகரில் உள்ள  உறவினர் வீட்டுக்கு வந்துள்ளார். மீண்டும் சொந்த  ஊருக்கு செல்வதற்காக பழைய பேருந்து நிலையத்திற்கு வந்த அவர். அரசுப் பேருந்தில் ஏறியுள்ளார். அப்போது பேருந்தில் கூட்டம் அதிக அளவில் இருந்ததாக கூறப்படு கிறது, இந்தநிலையில், சுப்புலட்சுமி கழுத்தில் அணிந்தி ருந்த 8 பவுன் தாலிச்செயினை மர்ம நபர் ஒருவர் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றார். எனவே. இதுகுறித்து சூலக்  கரை காவல்நிலையத்தில் சுப்புலட்சுமி புகார் செய்துள் ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து  மர்ம நபரைத் தேடி வருகின்றனர்.



 

;