பாஜக ஆளும் உத்தரப்பிர தேச மாநிலத்தின் சம்பல் பகுதியில் 19 வயது பெண்ணை செப்., 27 அன்று 5 பேர் கொண்ட கும்பல் கடத்தியது. கடத் தப்பட்ட பெண்ணுக்கு மயக்க மருந்து செலுத்தி மொராதாபாத்தில் உள்ள ஒரு வீட்டில் வைத்து 5 பேர் சித்ரவதை செய்து பாலியல் பலாத்காரம் செய் துள்ளனர். கிட்டத்தட்ட 20 நாட்களாக தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அக்டோபர் 12 அன்று அருகில் வசிக்கும் பெண்கள் மூலம் தப்பித்து வந்த பாதிக்கப்பட்ட பெண் தனது வீட்டிற்குச் சென்றுள்ளார். அதன் பிறகு 2 வாரம் கழித்து இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பாதிக் கப்பட்ட பெண் அளித்த வாக்குமூலத் தின் பேரில் 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவாக இருப்பதால் இன்னும் அவர்கள் கைது செய்யப்படவில்லை என வட்ட அதிகாரி (CO) ஜிதேந்திர குமார் தெரி வித்துள்ளார். நாள்தோறும் பாலியல் குற்ற சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் பெண்க ளுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் நாளுக்குநாள் மிக மோசமான அள வில் அதிகரித்து வருகின்றன. கடந்த சில மாதங்களாக பாலியல் குற்றச் சம்பவம் இல்லாத நாட்கள் என்று கூற முடியாத அளவிற்கு நாள்தோறும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஞாயிறன்று கூட டெங்கு நோயாளி யான இளம் பெண்ணை மருத்துவ மனை ஊழியர் பாலியல் வன் கொடுமை செய்த சம்பவம் மற்றும் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை டெலிவரி ஊழியர் பாலியல் பலாத் காரம் செய்த சம்பவம் நடைபெற்றது.