“135ஆண்டுகளுக்கு முன்பு முரட்டு மீசை, திருநீரை உடல் முழுவதும் பூசிக்கொண்டு கம்பீரமாக வலம் வந்த சிவா, சிவம், சுப்பராமன், சுப்பிர மணிய சிவா என்ற பெயர்களை கேட்டு அஞ்சி நடுங்கியது வெள்ளை ஏகாதி பத்தியம். இதற்குக் காரணம், விடு தலை வேட்கையை தூண்டிய சிவா வின் மேடைப் பேச்சும், சுட்டெரித்த எழுத்துக்களும், தமிழ்நாடு மக்களை தட்டி எழுப்பிய சுதந்திர எழுச்சியுமே ஆகும்”.
வறுமையும் தேசபக்தியும்!
ஒன்றுபட்ட மாவட்டமாக இருந்த மதுரையின் வத்தலகுண்டு என்னும் சிற்றூரில் ஒரு நடுத்தர குடும்பத்தில் 1884இல் பிறந்தவர் சுப்பராமன். அவர் ஒரு சிறந்த சிவ பக்தர். இன்றைய போலி சாமியார்கள் போல் அல்ல! திண்ணைப் பள்ளியில் ஆரம்பக் கல்வி படித்த சிவா, 12 வயது வரை மதுரையிலும், பிறகு கோவையில் ஓராண்டும் கல்லூரியில் பயின்றவர். குடும்பத்தின் வறுமையால் இலவச உணவு கிடைக்கும் என்பதால் கேரளம் மாநிலம் திருவனந்தபுரம் சென்று அன்னச் சத்திரத்தில் தங்கி கல்வியை தொடர்ந்தார். அனைவரும் நமக்கென்ன? என்று இருந்த அந்தக் காலக்கட்டத்தில் விடு தலை வேள்வியில் தன்னை முழுமை யாக ஈடுபடுத்திக் கொண்டு தேச பக்த ராக மாறி, ஆங்கிலேய அரசுக்கு நெருக்கடி கொடுத்தார். இதற்காக ஊர் ஊராகச் சென்றார். வீதி தோறும் மேடைகள் அமைத்து, அந்நியர்களின் கொடுங்கோல் ஆட்சிக்கு எதிராக இளைஞர்களை ஒன்று திரட்டினார். தமிழிலும் ஆங்கிலத்திலும் சரள மாக அனல் பறந்த அவரது பிரச்சாரம் வெள்ளையர்களுக்கு ஆத்திரமூட்டி யது. உடனடியாக அங்கிருந்து வெளி யேற்றப்பட்டார். ஆங்கிலேயர்களின் ஆதிக்கத் திற்கு எதிராக முன்வைத்த காலை பின்வாங்குவதில்லை என்ற முடி வோடு விடுதலை கனலை மூட்டினார். கால்நடையாகவே தமிழ்நாட்டிற்கு வந்து சேர்ந்த அவர், தூத்துக்குடியில் சிதம்பரனாரை சந்திக்கிறார். இரு வருக்கும் நட்பு மலர்ந்தது. நெருங்கிய தோழர்களாக மாறினர். நெல்லை சீமையில் சுற்றுப் பயணம் மேற் கொண்டு அந்நியர்களின் அடிமைத் தனத்திற்கு எதிராக சுதந்திர தாகத்தை தட்டி எழுப்பினர்.
இளமையும் சிறையும்!
சிதம்பரனாருடன் மேடை தோறும் விடுதலைப் போராட்ட முழக்கமிட்ட வர். இவர்களின் சுதேச பக்த உண ர்வை தனது சுதேச கீதங்களால் தூண்டி விட்டவர் சுப்பிரமணிய பாரதி. நாடு விடுதலை பெற வேண்டும் என்று 16 வயதில் மக்கள் மத்தியில் கிளர்ச்சியை ஏற்படுத்த வ.உ.சி, பாரதியார், சிவா ஆகிய மூவரும் அரும்பாடுபட்டனர். ஒருவர் காலில் முள் குத்தினால் மற்ற இரு வருக்கும் வலிக்கும் உணர்வுகளை கொண்டனர். சிவாவின் விடுதலை முழக்க பிரச்சாரத்தில் வீசிய அனல் ஆங்கிலேய அரசை அச்சமடைய செய்தது. விளைவு, நெல்லை சதி வழக்கில் தூத்துக்குடியில் இருந்தும் வெளியேற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார். தேசத் துரோக குற்ற மும் சுமத்தப்பட்டது. 24 வயதில் சிறை யில் அடைத்த வெள்ளைக்கார அர சாங்கத்தின், நான்காண்டு கடுங் காவல் தண்டனை முடிந்து வெளியில் வந்ததும், 1912 ஆம் ஆண்டில் சென்னையில் குடியேறினார். திருவல்லிக்கேணி பகுதியில் மனைவி மீனாட்சி அம்மையாருடன் சில ஆண்டு காலம் வாழ்ந்து வந்த சிவா, தன்னுடன் தொண்டர் ஒருவரை அழைத்துக் கொண்டு ஒரு மேஜை, நாற்காலி, பெட் ரோமாக்ஸ் விளக்கை யும் எடுத்துக் கொண்டு கடற்கரைக் குச் செல்வது வழக்கமாம். அங்கு மக்கள் கூடும் இடத்தில் நாற்காலி மீது ஏறி நின்று உரத்த குரலில் மகாகவியின் பாடலுடன் துவங்கும் உரை, சுதந்திரப் பிரச்சாரமாக மாற்றியிருக்கிறது. தன்னலம் கருதா மல் கடமையே கருத்தாக இருந்த தேச பக்தர் சிவாவை மோப்பம் பிடித்த ஆங்கிலேய அரசு, மீண்டும் இரண்ட ரை ஆண்டுகள் சிறை வைத்தது.
தொழிலாளியின் தோழன்!
சென்னை டிராம்வே தொழிலாளர் வேலை நிறுத்தம், மதுரை ஹார்வி மில், தூத்துக்குடி கோரல் காட்டன் மில், திருநெல்வேலி போன்ற ஏராள மான போராட்டங்களில் கலந்து கொண்டு ஆங்கிலேய அரசுக்கு நெருக் கடிகளை கொடுத்து தொழிலாளர் களின் உற்ற தோழனாக வெள்ளை ஏகாதிபத்தியத்திற்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த தொழிற்சங்க முன்னோடிகளில் சிவாவும் ஒருவர்.
தனியாத தாகம்...
சிறந்த எழுத்தாளரான சிவா நடத்திய “ஞான பானு” பத்திரிகை ஆங்கிலேய ஆட்சியின் கோபத்திற்கு பாத்திரமானது. அன்றைக்கு சிறை யில் அடைத்து நடத்திய கொடுமை களை நினைக்கும் பொழுது ஒவ்வொரு இந்தியனும் மனம் உருகா மல் இருக்க முடியாது. காரணம், தீராத தொழுநோய்க்கு ஆளானார். அன்றைக்கு வயது 37. அந்த நிலை யிலும், வெள்ளையர்களுக்கு எதி ரான போராட்டத்தை நிறுத்த வில்லை. கட்டை வண்டி மற்றும் கால்நடையாக பம்பரம் போல சுற்றி சுற்றி பிரச்சாரம் மேற்கொண்டு அன்றைய சேலம் மாவட்டம், தற்போ தைய தருமபுரி மாவட்டத்தின் பாப்பாரப்பட்டிக்கு வந்து சேர்ந்தார். இங்கும் இளைஞர்களிடம் ஒற்றுமை உணர்வையும் தேசபக்தி யையும் ஏற்படுத்தினார். பாப்பாரப் பட்டி அருகில் பாரத மாதாவுக்கு ஒரு ஆலயம் எழுப்ப முயன்றார். அதற்காக சித்தரஞ்சன் தாஸை கொல்கத்தாவில் இருந்து அழைத்து வந்து 1923இல் அடிக்கல்லை நாட்டினார். தனது நண்பர்கள் மூலம் நிதி திரட்டி ஆறு ஏக்கர் நிலத்தை வாங்கி னார். அதில் ஆசிரமம் ஒன்றையும் நிறுவி ‘பாரதபுரம்’ என்று பெயர் சூட்டி னார். இதையும் பிரிட்டிஷ் அரசாங்கம் மோப்பம் பிடித்தது. மூன்றாவது முறையாக சிறை வைத்தது. ஓர் ஆண்டு என்றாலும் அனுபவித்த கொடுமைகள் சொல்லி மாளாது. சிறையிலிருந்து விடுவித்தாலும் தொழுநோய் பாதிப்பால் பேருந்து, ரயிலில் பயணம் செய்யத் தடை விதித்தது ஆங்கிலேய அரசு. உடல் உபாதையை பொருட்படுத்தா மல் மதுரையில் இருந்து பாப்பாரப் பட்டிக்கு கால்நடையாகவே வந்த டைந்தார். இளமையாக இருந்தா லும், தொல்லை தரும் கொடிய வியாதி, உடல் முழுவதும் புண்ணா னது. அப்போதும் துணியால் மூடிக் கொண்டு ஊர் ஊராகச் சென்றார்
“கொடியதோர் வியாதி கொல்லுது என்ன”என்று ஒரு பாட லில் தனது வலியை சமூகத்திற்கு உணர்த்தினார். சாதி பேதத்தை எதிர்த்த சிவா என்ற சங்கநாதம், தியா கத் தழும்பு, இறுதி மூச்சு வரைக்கும் வெள்ளைய ஏகாதிபத்துக்கு எதிரான புரட்சிக் கனவுகளுடன் 41 ஆவது வயதில் ஜூலை 24 ஆம் தேதி 1925 ஆம் ஆண்டில் பாப்பாரப்பட்டியில் பிரியாவிடை பெற்றார். சுப்பிரமணிய சிவா உயிர் நீத்த இடத்தில் அவரது அனுதாபிகளும் தேச பக்தர்களும் நினைவு இல்லம், தூண் அமைத்துள்ளனர். நீண்ட காலம் கிடப்பில் போடப்பட்ட மணி மண்டபம் அமைக்கும் பணியை திமுக ஆட்சியில் கலைஞர் நிறை வேற்றினார். மார்பளவு சிலையும் பூங்காவும் அமைக்கப்பட்டது. அனைத்து மக்களும் சாதி, மத பேதமின்றி வாழ வேண்டும் என்ற சுப்பிரமணிய சிவாவின் கனவை நனவாக்கும் வகையில் நூலகத்துடன் கூடிய ‘நினைவாலயம்’ ஒன்றும் அமைத்து ஒவ்வொரு ஆண்டும் விழா எடுத்து வருகிறது மாநில அரசு. எதற்கும் அஞ்சாமல் நாட்டுப் பற்றுடன் மொழிப் பற்றும் கொண்ட சுப்பிர மணிய சிவாவின் 140 ஆவது பிறந்த நாளில் அவரது நினைவை போற்றுவோம்!
- சி. ஸ்ரீராமுலு