கொச்சி, அக். 6- நெடும்பாச்சேரியில் உள்ள கொச்சி விமான நிலையத்தில் ஒன்றரை கோடி ரூபாய் மதிப்புள்ள 3.25 கிலோ தங்கத்தை ஏர் சுங்கத்துறை புலனாய்வுப் பிரிவினர் பறி முதல் செய்தனர். துபாயில் இருந்து தங்கம் கொண்டு வந்த மூன்று பயணிகள் கைது செய்யப்பட்டனர். நெடும்பாச்சேரியில் சமீபகாலத்தில் நடந்த மிகப்பெரிய தங்க வேட்டை இதுவாகும். கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த நிகில் என்பவர் 1783.27 கிராம் தங்கத்தை திரவ வடிவில் நான்கு கேப்சூல்களில் சிறப்பு கவரில் ஆசனவாயில் மறைத்து வைத்து கொண்டு வந்தார். மலப்புரத்தைச் சேர்ந்த ஒருவர் தனது ஆசனவாயில் நான்கு கேப்சூல்களில் 1140 கிராம் தங்கத்தை மறைத்து வைத்திருந்தார். காசர்கோட்டை சேர்ந்த ஒருவர் 117 கிராம் தங்கத்தை பையில் மறைத்து வைத்திருந்தார். மேலும் 200 கிராம் பொடி தங்கம் ஒரு அட்டை பெட்டிக்குள் தடவி கொண்டு வரப்பட்டிருந்தது. அதன் உரிமையாளர் கண்டுபிடிக்கப்படவில்லை.