states

img

ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க கோரிக்கை ராஜஸ்தான் பாஜக எம்எல்ஏ-க்கள் மாடுகளுக்காக போராட்டம்!

ஜெய்ப்பூர், செப்.21- ராஜஸ்தான் மாநிலத்தில், கால்நடைகளுக்கு ‘லம்பி ஸ்கின்’ நோய் எனப்படும் ‘தோல் கழலை’ நோய் பாதிப்பு அதிகரித்து வரு கிறது.  இதனால் லட்சத்திற்கும் அதி கமான கால்நடைகள் பாதிக்கப் பட்டுள்ள நிலையில், 57 ஆயிரம் கால்நடைகள் உயிரிழந்துள்ளன. இந்நிலையில், லம்பி நோயைக் கட்டுப்படுத்த ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் அரசு முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டிய பாஜக, இப்பிரச்ச னையை முன்வைத்து ஜெய்ப்பூரில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளது. அத்துடன், லம்பி நோய் பாதி ப்பு, வேலையின்மை, மின் கட் டண உயர்வு, சட்டம் - ஒழுங்கு பிரச்ச னைகளை குறிப்பிட்டு, இதற்கு காங்கிரஸ் ஆட்சிதான் காரணம் என்று கூறி சட்டப்பேரவை நோக்கி பேரணியும் சென்றனர். அவர் களை போலீசார் தடுத்து நிறுத்திய போது, தடுப்புகளை உடைத்துக் கொண்டு சென்றதுடன், போலீசாரு டனும் மோதலில் ஈடுபட்டுள்ளனர். “மாநில அரசு நோயைத் தடுக்க தவறிவிட்டு, ஒன்றிய அரசை தொற்றுநோயாக அறிவிக்க வலி யுறுத்தி வருகிறது. பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும்” என்று பாஜக தலைவர் பூனியா பேட்டி யும் அளித்துள்ளார். கடந்த திங்கட்கிழமையன்று, பாஜக எம்எல்ஏ சுரேஷ் சிங் ராவத், சட்டமன்றத்திற்கு பசு மாட்டோடு  வந்தார். அப்போது அந்த பசு  மிரண்டு ஓடிய நிலையில், ராஜஸ் தான் அரசு மீது கோமாதா கோபத் தில் இருப்பதாக செய்தியாளர் களுக்குப் பேட்டியளித்தார்.

;