states

img

உக்ரைன் விவகாரம்: வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கேரள முதல்வர் கடிதம்

உக்ரைன் நாட்டில் சிக்கித் தவிக்கும்  இந்திய மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியுறவுத்துறை அமைச்சருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது,

உக்ரைனின் தற்போதைய சூழ்நிலையில் நாங்கள் தீவிரமாக அக்கறை கொண்டுள்ளோம், மேலும் அந்த நாட்டில் கல்வியைத் தொடரும் எங்கள் மாணவர்களின் பாதுகாப்பு குறித்து நாங்கள் கவலைப்படுகிறோம்.

உக்ரைனில் உள்ள இந்திய மாணவர்களில் கேரளாவைச் சேர்ந்த 2320 மாணவர்கள் உள்ளனர்.

அந்த நாட்டில் உள்ள அதிகாரிகளுடன் பேசி மாணவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்திட இந்த கடிதத்தை எழுதுகிறேன்

மேலும், சிறப்பு விமானங்களை ஏற்பாடு செய்து அவர்களை பத்திரமாக இந்தியாவிற்கு அழைத்துவர தாங்கள் தலையிட வேண்டும் என்பதையும் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.