திருவனந்தபுரம், செப்.10- சாதி, மத எண்ணங்கள், பழக்கவழக கங்கள், மூடநம்பிக்கைகள் கொடிகட்டிப் பறந்த சமுதாயத்தில் மறுமலர்ச்சி விதை களை பரப்பியவர் ஸ்ரீநாராயண குரு என்று முதல்வர் பினராயி விஜயன் கூறினார். சனிக்கிழமையன்று கொண்டாடப்படும் ஸ்ரீநாராயணகுரு பிறந்த நாளையொட்டி முதல்வர் பினராயி விஜயன் தனது முக நூலில் தெரிவித்துள்ள வாழ்த்துச் செய்தி யில் கூறியிருப்பதாவது: உயர் சாதிக் கருத்துக்களைக் கேள்வி எழுப்பி சமூக சீர்திருத்தப் போராட்டங்க ளைத் தொடங்கினார் குரு. கேரள மறு மலர்ச்சியின் கண்ணாடி குரு தரிசனம். கேரளாவில் குரு உள்ளிட்டோர் விதைத்த மறுமலர்ச்சி சிந்தனைகளை தொடர்ந்து முன்னெடுத்தது கம்யூனிஸ்ட் இயக்கம். கேரளாவின் பெருமைக்கும் உயர்வுக்கும் அடித்தளம் அந்த தொடர்ச்சியில் உள்ளது. நமது பயணம் மேலும் முன்னேற வேண் டும். குருவால் முன்வைக்கப்பட்ட சமுதாய மாக மாற நாம் இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டும். இனவாதம், சாதிவாதம் மற்றும் வெறுப்பு அரசியல் ஆகியவை சவால்களாகவே இருக்கின்றன. இந்த சவால்களை நாம் முறியடித்து முன்னேற வேண்டும். குறுகிய நலன்கள் மனித ஒற்றுமையை சிதைக்க அனுமதிக்கக் கூடாது. குருவின் சிந்தனையும் போராட்ட குணமும் நமக்கு ஆற்றலைத் தருபவை. அனைவருக்கும் ஸ்ரீ நாராயண குரு ஜெயந்தி நல்வாழ்த்துக்களை தெரிவித் துக்கொள்கிறேன். இவ்வாறு முதலமைச்சர் கூறியுள்ளார்.