states

img

3 முக்கிய பிரிவுகள், 140 தணிக்கை குழுவுடன் கேரள ஜிஎஸ்டி துறையின் மறுசீரமைப்பு

திருவனந்தபுரம், ஜுலை 28- ஜிஎஸ்டி துறையானது வரி  செலுத்துவோர் சேவை, தணிக்கை,  உளவுத்துறை மற்றும் அமலாக்கத் துறை என மூன்று பிரிவுகளாக பிரிக்கப் படுவதாகவும் ஏழு பகுதிகளில் 140 தணிக்கை குழுக்கள் இருக்கும் என  வும் கேரள நிதியமைச்சர் கே.என்.பாலகோபால் அறிவித்தார். 2018 ஆம் ஆண்டு அமைக்கப் பட்ட உயர்மட்டக் குழுவின் பரிந்துரை களை பரிசீலித்து அமைச்சரவைக் கூட்டம் இந்த முடிவை எடுத்தது. வரி ஆராய்ச்சி மற்றும் கொள்கை, மறு ஆய்வு, கணக்கு தணிக்கை, அட்வா ன்ஸ் ரூலிங், மக்கள் தொடர்பு, நிர்வாக ஒருங்கிணைப்பு செல்கள் மற்றும் மத்திய பதிவு செல் ஆகியவை தொடர்புடைய பணிகளுக்காக புதிதாக உருவாக்கப்படும். அதிகாரிகள் நிலையிலும் மாற்றங்கள் ஏற்படும். உதவி ஆணை யர்/ மாநில அலுவலர் பதவியில் 24 பணியிடங்கள் உருவாக்கப்பட்டு துணை ஆணையர் பதவிக்கு தரம் உயர்த்தப்படும். உதவி ஆணையர்/ மாநில வரி அதிகாரியின் பலத்தைத் தக்கவைக்க, துணை மாநில வரி  அலுவலர்/ உதவி மாநில அலுவலர் ஆகிய 24 பதவிகள் தரம் உயர்த்தப் படும். உதவி மாநில வரி அலுவலர் பதவியின் எண்ணிக்கை 981இல் இருந்து 1362 ஆக உயர்த்தப்படும். இது 52 தலைமை எழுத்தர் மற்றும் 376 மூத்த எழுத்தர் பணியிடங்களின் தகுதியையும் அதிகரிக்கும். பதிவு, அறிக்கை சமர்ப்பிப்பு மற்றும் விவா தத் தீர்வு ஆகியவை வரி செலுத்து வோர் சேவைகள் பிரிவால் கையா ளப்படும். தணிக்கைத் துறையானது திரும்பப் பார்க்கும் ஆய்வு, தணிக்கை  போன்றவற்றுக்கு பொறுப்பாகும். உளவுத்துறை 41 பிரிவுகளையும், அமலாக்கத்துறை 47 பிரிவுகளையும் கொண்டிருக்கும் என அமைச்சர் அறிவித்துள்ளார்.