திருவனந்தபுரம், ஆக.19- வெளிநாட்டில் உள்ளவர்களுக்காக ‘‘வளைகுடா தேசாபிமானி’’யை முதல்வர் பினராயி விஜயன் சனிக்கிழ மையன்று வெளியிட்டார். இது வளை குடா நாடுகளில் இருந்து வரும் செய்தி களை உள்ளடக்கி இ-பேப்பராக வெளியிடப்படுகிறது. ‘‘வளைகுடா தேசாபிமானி’’ வெளிநாட்டில் வாழ்பவர்களின் வாழ்க்கை, அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் மற்றும் நம்பிக்கை களைப் பகிர்ந்து கொள்ளும். இது மலை யாள அச்சு ஊடகத் துறையில் 80 ஆண்டுகளாக கருத்தியல் வலிமையும் தெளிவும் கொண்ட தேசாபிமானியின் புதிய கால்தடமாகும். ‘‘வளைகுடா தேசாபிமானி’’ வாரத் தில் ஆறு நாட்களும் இரண்டு பக்கங் களாக வெளிவருகிறது. அனைத்து வளைகுடா நாடுகளிலிருந்தும் செய்தி களைப் பெறுவதற்கு ஏராளமான நிரு பர்கள் உள்ளனர். கேரளாவில் இருந்து புலம்பெயர்ந்தவர்கள் தொடர்பான செய்திகளுக்கும் இடம் இருக்கும். புலம்பெயர்ந்தோரின் நலனுக்காக மாநில அரசு செயல்படுத்தும் நலத்திட்ட ங்கள் பற்றிய செய்திகளும் வளைகுடா தேசாபிமானியின் ஒரு பகுதியாக இருக்கும். தேசாபிமானி திருவனந்த புரம் யூனிட்டில் நடைபெற்ற இந்த வெளி யீட்டு விழாவிற்கு பொது மேலாளர் கே.ஜே.தாமஸ் தலைமை தாங்குகிறார். முதன்மை ஆசிரியர் புத்தளத்து தினேசன், பொறுப்பாசிரியர் வி.பி.பர மேஸ்வரன், தலைமை செய்தி ஆசிரி யர் மனோகரன் மோரை உள்ளிட்டோர் பங்கேற்றனர். பல்வேறு வளைகுடா நாடுகளில் வசிப்பவர்கள் விழாவை பேஸ்புக் லைவ் மூலம் ஆன்லைனில் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.