states

img

தினமும் அரை லட்சம் ஏசி டிக்கட்டுகள் ரத்து சாலைப் பயணத்தில் இடையூறுகளால் கே-ரயில் கூடுதல் பயணிகளை ஈர்க்கும்

திருவனந்தபுரம், ஜன. 1- சாலைப் போக்குவரத்தையும் ரயிலையும் நம்பியிருக்கும் பயணிகளுக்கு கே-ரயில் சில்வர் லைன் திட்டம் ஈர்ப்பை ஏற்படுத்தி உள்ளது. தினமும் முன்பதிவு செய்து காத்திருப்போர் பட்டியலில் உள்ள பெரும்பாலான பயணிகளுக்கு ரயிலில் ஏசி டிக்கெட் கிடைப்பதில்லை. ஆறு மாதங்க ளில் ஏசி வகுப்பில் பயணம் செய்ய முன்பதிவு செய்து காத்திருப்போர் பட்டியலில் உள்ள 52 லட்சம் பயணச் சீட்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. அதாவது, ஒரு நாளைக்கு அரை லட்சம் பயணச்சீட்டுகள் ரத்தாகின்றன. இதில் பெரும் பகுதி கேரளாவுக்கு சொந்தமானது. காத்திருப்போர் பட்டியலில் உள்ள பயணிக ளுக்கு 150 கூடுதல் டிக்கெட்டுகளை வழங்க ரயில்வே  முடிவு செய்துள்ளது. ஆனாலும் டிக்கெட் கிடைக்கா தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 2019-20இல் நான்கு கோடியாக இருந்த தினசரி ரயில் பயணிகளின் எண்ணிக்கை 2021இல் ஏழு கோடியாக அதிகரித்துள்ளது. கேரளாவில் சாலைப் போக்குவரத்துத் துறையில் வாகனங்களின் எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் அதிகரிக்கப் போகிறது. ஒன்றிய அரசு தனது வாகன காலா வதிக் கொள்கையை அறிவித்ததும் இது தெளிவாகத் தெரிந்தது. சாலைகளில் செல்ல முடியாத அளவுக்கு வாக னங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். சாலை விரிவாக்கமும் பிரச்னையாக உள்ளது. காரில் 200 கி.மீ.க்கு மேல் பயணிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கே-ரயில் ஆய்வில் தெரிய வந்துள்ளது. ரயில் மற்றும் பேருந்து அமைப்பை விட எளிதான பயணத்தை அவர்கள் விரும்பு கின்றனர். இந்த பயணிகள் கே-ரயிலின் சில்வர்லை னைத் தேர்ந்தெடுப்பார்கள் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது.