states

பாதுகாப்பு படைகளுக்கு பெரும் இழப்பு: கேரள முதல்வர்

திருவனந்தபுரம், டிச.9- குன்னூரில் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி ராணுவ கூட்டுத் தளபதி ஜெனரல் பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் மற் றும் 11 ராணுவம் மற்றும் விமானப்படை வீரர் களின் மறைவுக்கு முதல்வர் பினராயி விஜ யன் புதனன்று (டிச.8) இரங்கல் தெரிவித்தார். இந்த விபத்துச் செய்தி மிகவும் வேதனை யானது. பாதுகாப்பு படைகளுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த ஜெனரல் ராவத், அவரது குடும்பத்தினர் மற் றும் அனைத்து பாதுகாப்புப் படை வீரர் களின் குடும்பங்களுக்கும் இரங்கலைத் தெரி விப்பதாக பினராயி விஜயன் குறிப்பிட்டுள் ளார்.

;