states

img

ஆளுநரின் பொய்ப் பிரச்சாரங்கள் : எதிர்பார்த்தது கிடைக்காத ஏமாற்றம்

திருவனந்தபுரம், செப்.17- ஆளுநர் எதிர்பார்த்தது கிடைக் காமல் ஏமாற்றமடைந்து ஊடகங்கள் முன் தவறான கருத்துக்களை பரப்பி  வருகிறார் என மார்க்சிஸ்ட் கம்யூனி ஸ்ட் கட்சியின் கேரள மாநிலச் செயலா ளர் எம்.வி.கோவிந்தன் கூறினார். இதுகுறித்து சனிக்கிழமையன்று (செப்.17) செய்தியாளர்களிடம் எம்.வி.கோவிந்தன் மேலும் கூறியதாவது:  ஆளுநரின் நடவடிக்கைகள் அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டதா என மக்கள் சந்தேகிக்கின்றனர். வர லாற்று உண்மைகளை கண்டுகொள்ளா மல் ஆளுநர் மலிவான நிலைப்பாட்டை எடுக்கிறார்.  கண்ணூரில் படுகொலை முயற்சி நடந்ததாக கூறப்படுகிறது. வரலாற்று மாநாடு மேடையில் பிரபல மூத்த வர லாற்றாசிரியர் இர்பான் ஹபீப் ஆளுநரை கொல்ல சதி செய்தார் என்று கூறுவதில் எந்தளவு நம்பகத்தன்மை உள்ளது என்பதை மக்கள் புரிந்து கொள்வார்கள். அதற்கான ஆதாரம் இருந்தால், சரிபார்க்க தயார். வரலாற்று ஆய்வாளரும் கண்ணூர் பல்கலைக்கழக துணை வேந்தருமான ரவீந்திரன் கோபிநாத் மீது ஆளுநர் தேவையற்ற சர்ச்சைகளை உரு வாக்கி வருகிறார்.

மார்க்சும் மார்க்சியமும் உலகம் முழுவதற்கும் பயன்படுத்தக் கூடிய ஒரு பார்வையாகும். அதன்படி செயல்படும் கட்சிகள் உலகம் முழு வதும் உள்ளன. இந்தியாவில் காங்கிரஸ் உருவாவதற்கு முன்பே, இந்தியாவைப் பற்றி மார்க்ஸ் கூறியிருந்தார். இந்தியாவில் நடந்த முதல் சுதந்திரப் போராட்டம், சாதி அமைப்பு பற்றி அனைத்தையும் மார்க்ஸ் கூறியுள்ளார். இதை புரிந்து கொள்ளாமல் ஆளுநர் பல விசயங்க ளை கூறி வருகிறார். மக்கள் திடீரென்று அதைக் கேட்டால், தவறாக புரிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கி றார். ஆளுநர் பொய்ப் பிரச்சாரம் செய்கி றார். ஒரு ஆளுநராக தன் நிதானத்தை அவர் காட்டுவதில்லை. அரசு மற்றும் பல்கலைக்கழகத்திற்கு எதிராக பொய்ப் பிரச்சாரம் செய்யப்படுகிறது. தகுதிக்கு இது பொருத்தமற்ற அணுகு முறை. ஆளுநரின் அரசியல் சாசன பதவிக்கு மதிப்பளிப்பதே அரசின் நிலைப்பாடு என எம்.வி.கோவிந்தன் தெரிவித்தார்.

;