கொச்சி, ஆக.6- வெளிமாநில தொழிலாளர்களின் குழந்தைகளது பாதுகாப்பின் ஒரு பகுதியாக ஆலுவா மற்றும் பெரும்பா வூர் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் பகல் நேர பராமரிப்பு மற்றும் குழந்தை காப்பகம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்று தொழில்துறை அமைச்சர் பி. ராஜீவ் தெரிவித்தார். ஆலுவாவில் ஐந்து வயது சிறுமி கொல்லப்பட்டதையடுத்து, குழந்தை களுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கும் வகையில் எர்ணாகுளம் ஆட்சியர் அலு வலகத்தில் பல்வேறு துறையினர் பங்கேற்ற சிறப்புக் கூட்டத்தில் இத னைத் தெரிவித்த அமைச்சர் மேலும் கூறுகையில், வெளிமாநில தொழி லாளர்களின் குழந்தைகள் படிக்கும் பள்ளிகளைச் சுற்றி பகல் நேர பராமரிப்பு மையங்களை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன என்றார். பெற்றோர்கள் வேலைக்குச் செல்வ தால், பள்ளி நேரம் முடிந்தும், விடுமுறை நாட்களிலும் குழந்தைகள் வீட்டில் தனி யாக இருக்கும் நிலையைத் தவிர்க்க வேண்டும் என்பதே இதன் நோக்கம். தேவையான இடங்களில் குழந்தைகள் காப்பகம் (க்ரஷ்) அமைக்கப்படும்.
ஆலு வாவில் நடந்தது மிகவும் துரதிர்ஷ்டவச மான சம்பவம் என்றும், இதுபோன்ற சம்பவம் மீண்டும் நடைபெறாமல் இருக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அமைச்சர் கூறினார். தொழிலாளர் துறை, காவல்துறை, கலால் மற்றும் உள்ளாட்சித்துறைகளின் தலைமையில் வெளிமாநில தொழி லாளர்களைப் பதிவு செய்வதற்கான வெகுஜன இயக்கம் நடத்தப்படும். வெளிமாநில தொழிலாளர் (அதிதி) ஆப்ஸ் தயாரானதும், பதிவு செயல் முறை வேகமெடுக்கும். வாடகைக்கு விடப்பட்டுள்ள வீடுகளை நகராட்சியில் முறையாக பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். வெளிமாநில தொழிலாளர்களி டையே போதைப்பொருள் பயன்பாடு மற்றும் பரவலைத் தடுக்க காவல்துறை மற்றும் கலால் துறையினர் இணைந்து சிறப்பு ஆய்வுகளை மேற்கொள்ளுமாறு அமைச்சர் உத்தரவிட்டார். போதைக்கு எதிரான விழிப்புணர்வு பரவலாக ஏற் படுத்தப் படும். இதுபோன்ற அனைத்து நடவடிக்கைகளிலும் மக்கள் பிரதிநிதி களின் ஒத்துழைப்பு உறுதிசெய்யப்படும். வெளிமாநில தொழிலாளர்கள் அதி கம் உள்ள ஆலுவா மற்றும் பெரும்பாவூர் பகுதிகளில் காலி கட்டிடங்களில் குற்றச் செயல்கள் நடக்க வாய்ப்பு உள்ளதாக புகார் எழுந்துள்ளது. இந்த இடங்களை கரும்புள்ளிகளாகக் கருதி, 24 மணி நேரமும் சிறப்புக் கண்காணிப்பை போலீஸார் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அமைச்சர் பரிந்துரைத்தார்.