கேரளா மாநிலத்தில் பல்வேறு இடங்களில் 140 கிலோ கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
கேரளா மாநிலத்தில் அடிக்கடி கஞ்சா பறிமுதல் செய்து வருகிறார்கள். ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் போன்ற இடங்களில் இதற்காக சிறப்பு காவல்துறை அதிகாரிகள் பரிசோதனை செய்து வருகிறார்கள். அங்கமாலி, பெருமும்பூர் ஆகிய இடங்களில் காவல்துறையினர் சோதனை நடத்தியதில் 140 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதனை ஆந்திராவில் இருந்து கேராளாவின் இடுக்கி மாவட்டத்திற்கு கடத்தி வரப்பட்டது விசாரணையில் தெரியவந்தது. கடத்தி வந்தவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.