சிங்கங்கள் இறப்பு தொடர்பாக ஒன்றிய சுற்றுச்சூழல் துறை இணை அமைச்சர் அஸ்வினி குமார் சவுபே மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், “2019 முதல் 2021 வரை 182 குட்டிகளும், 397 சிங்கங்களும் இறந்துள்ளன. 2019இல் 60 குட்டிகளும் 66 சிங்கங்களும், 2020இல் 76 குட்டிகளும் 73 சிங்கங்களும் 2021இல் 46 குட்டிகளும் 76 சிங்கங்களும் இறந்ததாகவும், மாநில அறிக்கையின்படி மாநிலம் முழுவதும் கடந்த ஐந்து ஆண்டுகளில் இறந்த சிங்கங்களில் 3.82 சதவீத குட்டிகள் உட்பட 10.53 சதவீதம் சிங்கங்கள் இயற்கைக்கு மாறான காரணங்களால் இறந்துள்ளன” என அவர் தெரிவித்துள்ளார்.