திங்கள், மார்ச் 1, 2021

states

img

ஒரே செட் ஆட்களையே அமைச்சர் ஆக்குவதா? எடியூரப்பாவுக்கு எதிராக பாஜக எம்எல்ஏக்கள் கலகம்....

பெங்களூர்:
ஒரே செட் ஆட்களுக்கேஅமைச்சர் பதவி கொடுத்தால், மிச்சம் இருப்பவர்கள் எல்லாம்எப்போதுதான் அமைச்சர் ஆவது?என்று கர்நாடகத்தில் முதல்வர்எடியூரப்பாவிற்கு எதிராக பாஜக எம்எல்ஏ-க்கள் கலகத்தில் இறங்கியுள்ளனர்.

கடந்த வாரம் கர்நாடக அமைச்சரவையை விரிவுபடுத்திய முதல்வர் எடியூரப்பா, காங்கிரஸ் மற்றும்மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சிகளில் இருந்து விலகி பாஜக-வில்சேர்ந்த  7 பேருக்கு புதிதாக அமைச்சர் பதவி வழங்கினார்.இது நீண்டகாலமாக அமைச்சர் பதவியை எதிர்பார்த்துக் காத்திருக்கும் சீனியர் தலைவர்களான ரேணுகாச்சாரியா, சித்து சவதி, எஸ்.ஏ. ராமதாஸ், அபய் பாட்டில் போன்றவர்களை கொதிப்படைய செய்தது. தற்போது அவர்கள் எடியூரப்பாவிற்கு எதிராக கலகத்தில்இறங்கியுள்ளனர். முதல்வர் எடியூரப்பாவின் ஆபாச வீடியோ ஒன்றுஎம்எல்ஏ-க்களின் கைகளுக்கு கிடைத்துள்ளதாகவும், அதை வெளியிட்டு விடுவோம் என்று மிரட்டித்தான்,

பலர் அமைச்சர் பதவி பெற்று வருவதாகவும் மத்திய முன்னாள் பாஜக அமைச்சரும், தற்போதைய எம்எல்ஏ-வுமானபி.ஆர். பாட்டில் யத்னால் ‘விவகாரமான’ குற்றச்சாட்டை கிளப்பினார். பாஜக மேலவை உறுப்பினர் விஸ்வநாத்தும் அதையே வழிமொழிந்தார்.தற்போது எடியூரப்பாவின் ஆபாச சி.டி. விவகாரம் கர்நாடக அரசியலில் புயலைக் கிளப்பி வரும் நிலையில், “எப்போது ஆட்சிக்கு வந்தாலும் ஒரே செட் ஆட்களுக்கே அமைச்சர் பதவி தருவதுநல்லதல்ல” என்று 6 முறைஎம்எல்ஏ-வாக தேர்ந்தெடுக்க பட்ட பாஜக மூத்த தலைவர் திப்பாரெட்டியும் (சித்ரதுர்கா தொகுதி) களத்தில் குதித்துள்ளார்.

தங்களுக்கும் அமைச்சர் பதவி வழங்க வேண்டும்; இல்லாவிட்டால் மொத்த அமைச்சரவையையும் கலைக்க வேண்டும் என்றுஎடியூரப்பாவிற்கு எதிராக 15 பாஜகஎம்எல்ஏக்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.

;