மக்களவைத் தேர்தல் நெருங்கியுள்ள நிலை யில், மத்திய அமைப்பு கள் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநி லங்களில் தொடர் சோதனை களை நடத்தி வருகின்றன. இந் நிலையில், வருமான ஏய்ப்பு நடை பெற்றதாக ஜார்க்கண்ட் மற்றும் ஒடிஷா மாநிலத்தில் உள்ள பவுத் டிஸ்டில்லிரீஸ் பிரைவேட் லிமிடெட், ஷிவ் கங்கா ஆகிய மது பானம் தயாரிக்கும் ஆலை நிறு வனங்களில் புதனன்று வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
சோதனை முடிவில் பல நூறு கோடி ரூபாய் சிக்கியதாகவும், 50 கோடி ரூபாய் எண்ணப்பட்டுள் ளதாகவும், இயந்திரம் பழுதால் மீதமுள்ள பணத்தை எண்ணமுடி யாமல் தவித்ததாகவும் செய்தி வெளியானது. ஆனால் தொடக் கத்தில் வருமான வரித்துறையி னர் தெளிவான தகவல் தெரி விக்காததால் 50 கோடி ரூபாய் எண்ணி முடித்த பொழுதே சோதனை நிறைவு பெற்றது என நினைத்து இருமாநில காவல் துறையினர் பாதுகாப்பை குறைத்து அடுத்த வேலைகளை கவனிக்க சென்றுவிட்டனர்.
மாநில போலீசார் சென்றபின் மத்திய படை போலீசார்கள் சில பேர் மட்டுமே சோதனை நடை பெற்ற இடங்களில் இருந்த னர். இதனை அறிந்த வருமான வரித்துறை மீதமுள்ள பணத் திற்கு எதாவது சிக்கல் ஏற்படும் என நினைத்து புதனன்று நள்ளி ரவு முதல் ஜார்க்கண்ட் மற்றும் ஒடிஷா மாநிலங்களில் வைக்கப் பட்டுள்ள பணத்தை வருமான வரித்துறையினர் சம்பவ இடத்தி லேயே பாதுகாத்து உள்ளனர். அதாவது வாட்ச்மேன்களாக மாறி பணத்தை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர் வரு மானவரித்துறையினர்.