states

img

பதாஞ்சலி நிறுவனத்தின் 5 மருந்துகளுக்குத் தடை!

பாபா ராம்தேவுக்கு சொந்தமான பதஞ்சலி நிறுவனத்தின் 5 மருந்துகளை, உத்தரகண்ட் அரசு தடை விதித்துள்ளது. 
பாபா ராம்தேவுக்கு சொந்தமான பதஞ்சலி நிறுவனத்தின் கீழ் இயங்கி வரும் திவ்யா பார்மசி, மதுக்ரிட், ஐக்ரிட், தைரோகிட், பிபிகிரிட், லிப்பிடோம் மாத்திரிகைகள் என 5 மருந்துகளை மருந்துகளை சாப்பிட்ட பலர் உடல் உபாதை ஏற்படுவதாக கூறி புகார் வந்தது. இதை அடுத்து, உத்தரகண்ட் மாநிலம் ஆயுர்வேதம் மற்றும் யுனானி கட்டுப்பட்டு இயக்குனரகம் ஆய்வு நடத்த முடிவு செய்தது. ஆய்வின் முடிவில் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், அதிக ரத்தக்கொழுப்பு போன்ற பிரச்சனைகளை குணப்படுத்தும் செயல்திறன் அந்த மருந்துகளுக்கு இல்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே குறிப்பிட்ட 5 மருந்துகள் மீது தடை விதிக்கப்பட வேண்டும் என்று அரசுக்கு கடிதம் எழுதியது. இதை அடுத்து, பதஞ்சலி நிறுவனத்தின் 5 மருந்துகளை, உத்தரகண்ட அரசு தடை விதித்துள்ளது.