ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரி கோட்டாவில் இருந்து இன்று (திங்கள்) காலை 9.10 மணி க்கு பிஎஸ்எல்வி சி58 ராக் கெட் விண்ணில் ஏவப்படுகிறது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ் ரோ ) சார்பில் எக்ஸ்போ சாட் உள்பட 10 செயற்கைக் கோள் பொருத்தப்பட்ட பிஎஸ்எல்வி சி58 இன்று விண்ணில் ஏவப்படுகிறது. விண்ணில் உள்ள தூசு, நிறமாலை, வாயுக்களின் மேக கூட்டமான நெபுலாவை எக்ஸ் போ சாட் ஆராய உள்ளது. திருவனந்தபுரம் கல்லூரி மாணவிகள் தயாரித்த வெசாட் செயற்கைக் கோளும் ஏவப்படுகிறது.
விண்ணில் செலுத்தப் படும் மொத்தம் 469 கிலோ எடை கொண்ட இந்த செயற் கைக்கோள், பூமியில் இருந்து சுமார் 650 கி.மீ. தொலைவில் நிலைநிறுத்தப் பட்டு ஆய்வுப் பணிகளை முன்னெடுக்க உள்ளது. பிஎஸ்எல்வி சி58 ராக்கெட் ஏவப்படவுள்ள நிலையில் பழவேற்காடு மீனவர்கள் கடலுக்குச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.