science

img

அறுபது செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய ஸ்பேஸ் எக்ஸ்!

ஃப்ளோரிடாவில், ஒரே நேரத்தில் அறுபது செயற்கைக்கோள்களை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.

உலகம் முழுவதும் சீரான மற்றும் அதிவேக இணைய சேவை வழங்குவதற்காக ஸ்டார் லிங்க் என்ற திட்டத்தை எலன் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் செயல்படுத்த முடிவுசெய்தது. ஃபால்கன் 9 ராக்கெட் மூலம் தலா 227 கிலோ எடையுடைய 60 செயற்கைக்கோள்கள்,  ஃப்ளோரிடாவின் கேப் கெனவெரலில் இருந்து உள்ளூர் நேரப்படி நேற்று இரவு 10 மணிக்கு ஏவப்பட்டது.

முன்னதாக செயற்கைக்கோள் மென்பொருளை மேம்படுத்தும் பணி மற்றும் பரிசோதனைகள் காரணமாக ராக்கெட்டை விண்ணில் ஏவும் பணி, கடந்த ஒரு வாரம் தாமதப்படுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
 
 

;