science

img

நெப்டியூனுக்கு அருகே பூமி போன்ற கிரகம் கண்டுபிடிப்பு!

நெப்டியூன் கோளை தாண்டி பூமியைப் போன்ற புதிய கிரகத்தை ஜப்பான் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

சூரிய குடும்பத்தில் புதன், வெள்ளி, பூமி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகிய 8 கோள்கள் உள்ளன. பூமியைப் போன்று உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற கிரகத்தை கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.

சூரியக் குடும்பத்தில் நெப்டியூன் கோளுக்கு அடுத்துள்ள பகுதி கைப்பர் பட்டை. அது பனிப்பொருட்களை கொண்ட பகுதி ஆகும். இங்குள்ள குறுங்கோள்கள் தண்ணீர், மீத்தேன், அமோனியாவால் ஆனவை.

இந்த பகுதியில் பூமி போன்ற கிரகம் இருக்கிறது. இதுதொடர்பாக மேலும் ஆய்வு செய்யப்பட வேண்டும் என விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

சூரியனில் இருந்து சுமார் 250-500 வானியல் அலகு தொலைவில் இந்த புதிய கிரகம் இருக்கிறது என ஜப்பானின் தேசிய வானியல் ஆய்வகம் தகவல் தெரிவித்துள்ளது.