science

img

ஆண்டிபயாடிக் மருந்துகளால் குணப்படுத்த முடியாத நோயால் ஆண்டுக்கு 10 மில்லியன் பேர் உயிரிழக்கும் நிலை வரும் - ஐநா எச்சரிக்கை

வரும் 2050-ஆம் ஆண்டுக்குள், ஆண்டிபயாடிக் மருந்துகளால் குணப்படுத்த முடியாத நோயால் ஆண்டுக்கு 10 மில்லியன் பேர் உயிரிழக்கும் நிலை வரும், இதனால் 2008-09 ஆம் ஆண்டு ஏற்பட்ட உலகளாவிய நிதி நெருக்கடியை போன்று பொருளாதாரம் பேரழிவை சந்திக்கும் என்று ஐ.நா எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த திங்கட்கிழமை அன்று, ஆண்டிமைக்ரோபியல் ரெசிஸ்டன்ஸ் ( Antimicrobial resistance) குறித்து இண்டர் ஏஜென்சி ஒருங்கிணைப்புக் குழு (ஐஏசிஜி) அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், ”2030 ஆம் ஆண்டுக்குள், ஆண்டிமைக்ரோபியல் மருந்துகளால் குணப்படுத்த முடியாத நோய்களால், 24 மில்லியன் பேர் கடுமையான வறுமையில் தள்ளப்படுவார்கள். 

குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் பெறும் நாடுகளில், ஆண்டிபயாடிக் ரெசிஸ்டன்ஸ் காரணமாக நோய்த்தொற்றுகள் பாதித்து ஆண்டுக்கு சுமார் 7,00,000 மரணங்கள் ஏற்பட்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. இதில் 2,30,000 பேர் காச நோய் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்” என்று கூறப்பட்டுள்ளது.

இதனை அடுத்து, ஐ.நா, சர்வதேச அமைப்புகள் மற்றும் வல்லுநர்கள், ஆண்டிபயாடிக் ரெசிஸ்டன்ஸ் பாதிப்பு குறித்து உடனடியாக  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எச்சரித்துள்ளனர்.

ஆண்டிமைக்ரோபியல் ரெசிஸ்டன்ஸ் என்பது நுண்ணுயிர்களை அழிக்க பயன்படுத்தப்படும் ஆண்டிபயாடிக் மருந்துகள் மூலம் நோய்களை குணப்படுத்த முடியாத நிலையாகும். இந்த ஆண்டிமைக்ரோபியல் ரெசிஸ்டன்ஸ், இந்தியாவில் வளர்ந்து வரும் பிரச்சனையாக உருவெடுத்திருக்கிறது. இது குறிப்பாக காச நோய் (TB), செப்சிஸ் மற்றும் மலேரியா போன்ற நோய்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடியதாகும். 

பொதுவாக வரும் நோய்களான சுவாசக் குழாய் தொற்று, பாலியல் நோய்த்தொற்று மற்றும் சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகள் போன்றவற்றிற்கு சிகிச்சையளிக்க முடியாது. ஆனால், தற்போது உயிர்காக்கும் மருத்துகளும் மிகவும் அபாயகரமானதாக மாறிவிடுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.


;