science

img

டிச.26 சூரிய கிரகணம்: அச்சம் தேவையில்லை

விஞ்ஞானிகள் விளக்கம்

சென்னை, டிச. 21 - டிச.26 அன்று ஏற்படும் வளையச் சூரியகிரகணம் குறித்து மக்கள் அச்சப்படத் தேவையில்லை. அது ஒரு வானியல் அற்புத நிகழ்வு என்று விஞ்ஞானிகள் கூறி யுள்ளனர். நிலவைவிடச் சூரியன் 400 மடங்கு பெரியது. பூமிக்  கும் நிலவுக்கும் உள்ளது போல் 400 மடங்கு தொலை வில் சூரியன் உள்ளது. அந்தச்  சூரியனை நிலவு மறைப் பதையே சூரிய கிரகணம் என்கிறோம். சூரியனை விட நிலவு சிறியது என்பதால், நிலா முழுமையாகச் சூரியனை மறைக்க முடியாது. எனவே,  நிலவு சூரியனை மறைக்கும் போது அதன் மையப்பகுதி மட்டும் மறையும். விளிம்பு பகுதி தீ வளையம் போலக் காட்சியளிக்கும். எனவே, இதை வளையச் சூரிய கிரக ணம் எனப்படுகிறது.

டிச.26 அன்று காலை 8 மணிக்குத் தொடங்கி 11.16 மணி வரை வளையச் சூரிய கிரணம் நிகழும். சூரியனின் மேற்கு திசையில் முதலில் நிலவு மறைக்கத் துவங்கும். கொஞ்சம் கொஞ்சமாகச் சூரிய  பிம்பம் மறைந்து பின்னர் 11.16  மணிக்கு நிலவு விலகும். தமிழகத்தில் கோவை, ஊட்டி, திருச்சி, புதுக் கோட்டை, ஈரோடு, திருப்பூர், கரூர், திண்டுக்கல், சிவ கங்கை, மதுரை ஆகிய இடங்  களில் காலை 9.31க்கு சூரிய னின் மையத்தில் அந்த அற்  புதக்காட்சி புலப்படும். இது சு மார் 2 நிமிடம் வரை நீடிக்கும். குறிப்பாகக் கர்நாடகத்தின் தென்பகுதியிலும், கேரளா வின் வடப்பகுதியிலும் தெரி யும். இந்தியா முழுமையி லும் இந்த கிரகணத்தைப் பார்க்க முடியும். அவை அள வில் வேறுபடும். மீண்டும் 2031ல் வளையச் சூரிய கிர கணம் நிகழும்.

சிறப்பு ஏற்பாடுகள்...

இந்த வளையச் சூரிய  கிரகணம் குறித்து மத்திய அரசின் விஞ்ஞான பிரசார் மைய விஞ்ஞானி தா.வி.வெங்கடேஸ்வரன், தமிழ்  நாடு அறிவியல் தொழில்  நுட்ப மையம் இயக்குநர்  சவுந்தரராஜ பெருமாள்  ஆகியோர் செய்தியாளர்களி டம் கூறியதாவது: வளையச் சூரிய கிரக ணத்தைக் கங்கண சூரிய  கிரகணம் என்றும் அழைப்  பார்கள். இந்த சூரிய கிர கணத்தால் மக்களுக்கு எந்த வித பாதிப்பும், கெடுதலும் நிகழாது. மர்ம கதிர்கள் வெளிவராது. உணவு கெடும், கர்ப்பிணிகள் வெளியே செல்லக்கூடாது என்பவை யெல்லாம் தவறானவை. எனவேதான், விஞ்ஞான் பிரசார், அறிவியல் கல்வி மற்றும் தொடர்பு குழு, இந்  திய வானவியல் கழகம், அறி வியல் பலகை, கணித அறி வியல் நிறுவனம், தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் இணைந்து பொது வெளியில் சூரிய கிரணத்  தைப் பார்க்கச் சிறப்பு ஏற்பாடு களைச் செய்து மக்களி டையே விழிப்புணர்வை ஏற்ப டுத்துகிறது.

எவ்வாறு பார்க்கலாம்?

சூரியனைச் சாதாரண மாகவே நேரடியாகப் பார்த்தால் கண் அயற்சி ஏற்ப டும். ஆகவே, சூரிய கிர ணத்தை வெறும் கண்ணால் பார்க்கக் கூடாது. எனவே, உரியப் பாதுகாப்பு உபகர ணங்களைக் கொண்டு பார்க்க வேண்டும். ஒளி வடி கட்டி கண்ணாடிகள், ஊசி துளை கேமிரா, தொலை நோக்கி, பைனாகுலர் போன்ற கருவிகள் மூலம் சூரியகிரகணத்தைப் பார்க்க லாம். கண்கண்ணாடி, புகைப்  படக்கருவி, வெல்டிங்கண் ணாடி, எக்ஸ்-ரே போன்ற வற்றின் மூலம் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும். எனவே, இந்த அற்புத  நிகழ்வைக் காண அவினாசி,  புதுக்கோட்டை, ஈரோடு, திருச்சி, கோவை, ஊட்டி, திருப்பூர், கரூர், திண்டுக்கல், சிவகங்கை, சென்னை ஆகிய இடங்களில் சிறப்பு  ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளது.

செயலி

இந்த சூரிய கிரணம் குறிப்  பிட்ட ஊரில், எத்தனை மணிக்கு, எந்த வடிவில் தெரி யும் என்பது உள்ளிட்ட தக வல்கள் அடங்கிய செயலி (ஃஆப்) பிளேஸ்டோரில் உள்ளது. தமிழ் உள்ளிட்ட மொழிகளில் உள்ள அத னைத் தரவிறக்கம் செய்து  பயன்படுத்திக் கொள்ள லாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.


 

;