science

img

அதிக நேரம் செல்போன் உபயோகித்தால் “கொம்பு முளைக்கும்” – ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை

அதிக நேரம் குனிந்த நிலையில் செல்போன் உபயோகித்தால் தலையின் கபாலத்தில், கொம்பு போன்ற கூர்மையான எலும்பு வளர்வதை ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் உள்ள சன்ஷைன் கடற்கரைப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டேவிட் ஷஹார் (David Shahar) மற்றும் மார்க் சேயர்ஸ் (Mark Sayers) என்ற இரு விஞ்ஞானிகள் செல்போன்களை அதிக நேரம் பயன்படுத்துவதால் உடலமைப்பில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். உயில் விசையியல் (பயோ மெக்கானிக்ஸ்) அடிப்படையில் உடலியக்கத்தை தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். இந்த ஆய்வில் 18 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்களை ஆய்வில் ஈடுபடுத்தி இருக்கிறார்கள். இதில் பங்கேற்றவர்களில் 40% பேருக்கு தலையின் மண்டை ஓட்டில் பின்புறமாக எலும்பு வளரும் சாத்தியம் அதிகமிருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

குனிந்து செல்போன்களை உபயோகிக்கும்போது உடலின் எடை முழுவதும் தலைப்பகுதிக்கு செல்கிறது. இதனால் பின்தலையில் கபால எலும்பிற்கு கீழே 3 முதல் 5 மில்லிமீட்டர் வரையிலான எலும்பு வளர்ச்சி பெறுகிறது. இதுகுறித்து ஆய்வில் ஈடுபட்ட டேவிட் கூறுகையில், “இளைஞர்கள் அதிகமாக செல்போன்களை தலையை கவிழ்த்த நிலையிலேயே உபயோகிக்கிறார்கள். இதனால் எலும்பு வளர்ச்சி பெறுவதோடு கடுமையான தலைவலியையும் கொடுக்கும்” 
என்று தெரிவித்தார்.
 

;