2020-ஆம் ஆண்டின் முதல் சந்திர கிரகணம் நாளை (10-ஆம் தேதி) நிகழ இருக்கிறது.
சந்திர கிரகணம் என்பது நிலவுக்கும், சூரியனுக்கும் இடையே புவி கடக்கும்போது நடக்கும் ஒரு நிகழ்வாகும். இந்த சந்திர கிரகணத்தால் பூமியில் விழும் சூரியனின் ஒளி சிறிது நேரத்திற்கு சற்றே மங்கிய நிலையில் காணப்படும். கிரகணம் உச்சியில் வரும்போது நிலவின் வெளிப்புற அடுக்கு பூமியின் நிழலில் மீது விழும். மேலும் கிரகணம் உச்சத்தில் இருக்கும்போது 90 சதவிகித நிலவு பூமியால் மறைக்கப்படும். இந்த நிகழ்வால் நிலவின் ஒளி மங்கும், மற்ற நாட்களில் காட்சியளிப்பது போல இருக்காது.
இந்நிலையில், இந்த ஆண்டில் 4 சந்திர கிரகணங்கள் நடைபெற உள்ளதாகவும், அதில் முதல் சந்திர கிரகணம், நாளை இரவு 10.37 மணிக்கு தொடங்கி மறுநாள் அதிகாலை 2.42 மணி வரை கிரகணம் நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த முதல் சந்திர கிரகணத்திற்கு 'Wolf Moon Eclipse' என்ற பெயரை நாசா சூட்டியுள்ளது. இந்த கிரகண நிகழ்வை இந்தியா, ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பா நாடுகளில் ஏறக்குறைய அனைத்து இடங்களிலும் பார்க்கலாம் என்று நாசா அறிவித்துள்ளது.