science

img

மக்கள் தொகை கணக்கெடுப்பில் இடம்பெறும் ஸ்மார்ட் போன்கள் , இணைய வசதி

புதுதில்லி,ஆக.4- முதன்முறையாக மக்கள் தொகை கணக் கெடுப்பின் போது ஸ்மார்ட் போன்கள், டிடிஎச் இணைப்பு, இணையதள வசதி உள்ளிட்டவை குறித்து விவரங்களும் பெறப்பட உள்ளன. 2021 ஆம் ஆண்டு மக்கள் தொகை பதிவேட்டிற்காக வீடுவாரியாக கணக்கெடுக் கும் பணிகள் அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் முதல் செப்டம் பர் மாதம் வரை நடைபெற உள்ளது. இதற்காக ஒவ்வொரு வீடுகளிலும் 34 வகையான விவரங்கள் பெறப்பட உள்ளன. இதில் முதல் முறை யாக ஒரு வீட்டில் உள்ள ஸ்மார்ட்போன்களின் எண்ணிக்கை, டிடிஎச் இணைப்பு, இணையதள வசதி, வங்கி கணக்குகள், வீட்டின் உரிமையாளர் பற்றிய விவரம்,  பாட்டிலில் அடைக்கப்பட்ட தண்ணீர் பயன்பாடு, மொபைல் எண்கள் உள்ளிட்ட விவ ரங்கள் பெறப்பட உள்ளன.

இந்த கணக்கெடுப்பின் போது சாதி பற்றிய விவ ரங்கள் பெறப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2011 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட சமூக பொருளாதார ரீதியான கணக்கெடுப்பின் போது, சாதி பெயர்களில் பல குழப்பங்கள் இருந்ததால் தற்போது வரை அந்த கணக்கெடுப்பின் முடிவுகள் வெளியிடப்படவில்லை என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதில் ஆண்கள், பெண்க ளின் எண்ணிக்கை தனித்தனி யாக கணக்கெடுக்கப்படாது என்றும் மூன்றாம் பாலி னத்தவர் பற்றிய விவரங்க ளும் சேர்க்கப்பட உள்ள தாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. மொத்தம் 31 லட்சம் பேர் இந்த மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட உள்ளனர். மொபைல் மூலம் கணக்கெடுப்பை எடுக்கும் வசதி இந்த முறை செய்யப்பட்டுள்ளது.  இந்நிலையில் மாதிரி கணக்கெடுப்பு நாடு முழு வதும் 40 முதல் 50 லட்சம் பேரிடம்  ஆகஸ்ட் 12 ஆம் தேதி முதல் செப்டம்பர் 30 வரை நடைபெற உள்ளது. 

;