science

img

கொரோனா அறிகுறி உள்ளவர்களை கண்டுபிடிக்கும் பறக்கும் நவீன கேமரா

சென்னை, ஏப்.19 - சென்னையில் கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த சுகாதாரத் துறையுடன் இணைந்து காவல்துறையினர் பல்வேறு நடவ டிக்கைகளை எடுத்து வருகின்றனர். கொரோனா பாதிப்புக்குள்ளான பகுதிகளில் தடுப்பு வேலிகளை அமைத்து நோய் பரவலை தடுப்பதற்கான நடவ டிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். கொரோனா தொற்று அறிகுறி இருப்பவர்களை முன்கூட்டியே கண்டறிந்து அவர்களை தனி மைப்படுத்தி வருகின்றனர். மேலும் மக்கள் நடமாட்  டம் அதிகம் உள்ள பகுதிகளை பறக்கும் கேம ராக்கள் மூலமாக காவல்துறையினர் கண்காணிக்க உள்ளனர்.

இதன்படி, கொரோனா நோயை கண்டுபிடிக்கும் அகசிவப்பு கதிர்களை பாய்ச்சும் கேமரா டிரோன்க ளில் இணைக்கப்பட்டு பறக்க விடப்படும். இந்த  கேமராக்களில் பதிவாகும் காட்சிகளை கணினியு டன் இணைக்கப்பட்டிருக்கும், மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள பகுதி களில் காய்ச்சல் அறிகுறியுடன் ஒருவர் நடமாடினால்  அவர் மீது இந்த கதிர்கள் பாய்ந்து காட்டி கொடுத்து  விடும். 98.5 பாரன்ஹூட் வெப்ப நிலையை தாண்டி  அதிக உடல் வெப்பத்துடன் வெளியில் சுற்றுப வர்கள் இந்த நவீன கேமராக்கள் மூலம் கண்டு பிடிக்கப்படுவார்கள். அவர்களின் புகைப்படத்துடன்  கம்ப்யூட்டரில் எச்சரிக்கை தகவல்களை உடனடி யாக வழங்கி விடும். இதனை கம்ப்யூட்டரில் பார்த்து  காய்ச்சல் மற்றும் கொரோனா பாதிப்புக்குள்ளான வர்களை எளிதாக கண்டுபிடிக்க முடியும்.

கோயம்பேடு மார்க்கெட், மண்ணடி, திருவொற்றி யூர், மயிலாப்பூர், ஐஸ்அவுஸ், தண்டையார் பேட்டை, அபிராமபுரம், திருவல்லிக்கேணி, ராய புரம், புரசைவாக்கம் உள்ளிட்ட பல இடங்களில் இந்த  நவீன கேமராக்களை பயன்படுத்தி சோதனை ஓட்ட மும் நடைபெற்று உள்ளது. முதல் கட்டமாக கோயம்  பேடு மார்க்கெட்டில் இந்த நடைமுறையை அறிமு கப்படுத்த காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர். இந்த கேமரா மூலம் கண்காணிக்கும் போது கொரோனா தொற்றுடன் வெளியில் சுற்றுபவர்கள் சிக்கி கொள்வார்கள் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

;