science

img

சிறுகோள் மீது மோதியது விண்கலம் நாசாவின் டார்ட் சோதனை வெற்றி

வாஷிங்டன், செப்.27- நாசாவின் டார்ட் சோதனை வெற்றி யடைந்துள்ளது. 96 லட்சம் கி.மீ தொலை வில் உள்ள சிறுகோள் மீது நாசாவின் விண் கலம் மோதியது. பூமியை அச்சுறுத்தும் விண்மீன்களை தவிர்க்கும் நோக்கில் நாசா விண்கலம் பறக்க விடப்பட்டது. நாசாவின் டார்ட் விண்கலம் 96 லட்சம்  கிலோமீட்டர் தொலைவில் உள்ள நிலவில் ஒளிரும் சிறுகோள் டிமார்பஸ் மீது மோதியது. நாசா விண்கலம் 22,500 கி.மீ வேகத்தில் சிறு கோளை தாக்கியது. டார்ட் தரையிறங்கும் புகைப்படங்களை நாசா வெளியிட்டுள்ளது. ஸ்பேஸ்எக்ஸின் பால்கன் 9 ராக்கெட்டைப் பயன்படுத்தி 2021 நவம்பர் 24 அன்று வெற்றிகரமாக ஏவப்பட்டது. டிடிமோஸ் என்கிற சிறு விண்கோளை சுற்றி வரும் நில வொளி சிறுகோள் 525 அடி விட்டம் கொண்ட தாகும். டார்ட் சோதனையானது பூமியை நோக்கிச் செல்லும் சிறுகோள்களைத் திசை திருப்புவதையும் வானில் அவற்றை அழிப்பதையும் நோக்கமாகக் கொண்டது. இரட்டை சிறுகோள் திசைதிருப்பல் சோத னையின் வெற்றியுடன், பூமிக்கு வான்வழி அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள பாது காப்பு அமைப்பு பலப்படுத்தப்படும். டார்ட்  சிறுகோளை நகர்த்த முடியுமா இல்லையா என்பது எதிர்கால ஆராய்ச்சியாளர்களுக்கு ஒரு பாடமாக இருக்கும். அடுத்த நூறு  ஆண்டுகளுக்கு ஏதேனும் சிறுகோள்கள் பூமியைத் தாக்குமா என்பது தெரியவில்லை என்றாலும், விண்வெளிப் பாறைகள் இறுதியில் பூமியை வந்தடையலாம் என்று நாசா ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.

;