science

img

சந்திரனில் இறங்க தயாராகிறது விக்ரம்

பெங்களூரு, செப். 3- சந்திரயான் 2 விண்கலத்தின் லேண்டர் விக்ரம் வரும் செப்டம்பர் 7ஆம் தேதியன்று சந்திரனில் தரையிறங்க ஏற்பாடுகள் தயாராகி வருகின்றன. நிலவைச் சுற்றி வந்து கொண்டிருக்கும் சந்திரயான் 2 விண்கலத்தின் இறுதி மற்றும் 5வது கட்ட நீள்வட்டப்பாதை குறைப்பு நடவடிக்கையை விஞ்ஞானிகள் வெற்றிகரமாக செப்டம்பர் 1 ஆம் தேதியன்று மேற்கொண்டனர். விக்ரம் லேண்டர் குறைந்தபட்சம் 119 கிமீ தொலைவையும் அதிக பட்சம் 127 கிமீ தொலைவையும் கொண்ட நீள்வட்டப் பாதையில் நிறுத்தப்பட்டது.

செப்டம்பர் 2 திங்களன்று மதியம் 1.15மணியளவில், விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக சந்திரயான் 2 ஆர்பிட்டரில் இருந்து வெற்றிகரமாகப் பிரிக்கப்பட்டது. இந்நிலையில், செவ்வாயன்று காலை லேண்டரின் வட்டப்பாதை மேலும் குறைக்கப்பட்டது. சந்திரயான் 2 விண்கலத்தில் லேண்டரை சந்திரனின் அருகில்(109 கி.மீ) கொண்டு செல்லப்போவதாகவும், புதனன்று (செப்டம்பர் 4) 36 கி.மீ அருகில் கொண்டு செல்லப்படும் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, செப்டம்பர் 7 அதிகாலை 1.40 மணியளவில், நிலவில் தரையிரங்கும் பணிகள் தொடங்கும்  என்றும், நிலவில் தரையிறக்குவதற்காக சரியான சமதளப் பரப்பை தேர்வு செய்த பின் சரியாக 1.55 மணிக்கு விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கும் என்றும் இஸ்ரோ கூறியுள்ளது.

;