science

img

சந்திரயான் 2 நிகழ்வுகள்

இந்தியாவைப் போலவே ஆர்வத்துடன் பின்தொடர்ந்த பாகிஸ்தான் மக்கள்

இஸ்லாமாபாத், செப்.16- சந்திரயான் 2 நிலவில் விக்ரம் லேண்டரைத் தரையிறக்கிய போது, இந்தியாவைப் போலவே பாகிஸ்தானிலும் ஆர்வத்தோடு அதன் நிலை குறித்து கூகுளில் தேடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 6-ம் தேதி முதல் 7-ம் தேதிக்குள் கூகுள் டிரெண்ட்ஸில் சந்திர யான் 2, விக்ரம் லேண்டர் ஆன் மூன் உள்ளிட்ட வார்த்தைகள் தேடப் பட்டது குறித்து இந்தியா, பாகிஸ்தான் இடையே கூகுள் டிரெண்ட்ஸில் ஒப்பிட்டுப் பார்க்கப்பட்டது. அப்போது, இந்தியர்க ளைப் போலவே, பாகிஸ்தானின் பல்வேறு பகுதிகளிலும் வசிக்கும் மக்களும் அந்த சொற்களை மொபைலில் உள்ள கூகுள் தேடுபொறி யில் பதிவிட்டு தேடியதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதிலும்,  நள்ளிரவு இரண்டரை மணிக்கே அதிகம் பேர் அந்த சொற்களைத் தேடியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அடுத்த 2 நாட்களுக்கு அதன் தொடர் நிகழ்வு களை கூகுளில் தேடுவது இந்தியாவில் குறைந்துவிட்ட பின்பும், பாகிஸ் தானில் அதே ஆர்வம் தொடர்ந்ததாக கூகுள் தரவு தெரிவிக்கிறது. இந்திய ஊடகங்கள் வாயிலாக மக்கள் தொடர்ந்து தகவல்களைத் தெரிந்துகொண்டே இருந்ததால், கூகுளில் தேட வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கவில்லை என்றும் இதுகுறித்து ஆய்வு மேற்கொண்ட செய்தி நிறுவனம் ஒன்று கூறியுள்ளது.

;