science

img

சந்திராயன் 2 : வெற்றிகரமாக  பிரிந்தது லேண்டர் விக்ரம்

சந்திராயன் 2 விண்கலத்தில் இருந்து பிரக்யான் லேண்டர் ரோவர் வெற்றிகரமாக  பிரிக்கப்பட்டுள்ளது. 

இஸ்ரோவின் சந்திரயான் 2 விண்கலம், 5வது முறையாக மாற்றி அமைக்கப்பட்டு நிலவை நோக்கி வெற்றிகரமாக நகர்ந்து கொண்டிருக்கிறது. Iஇதைத்தொடர்ந்து  செப்டம்பர் 7ஆம் தேதி, நிலவில் தரையிறங்கும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது. 
நிலவில் உள்ள நீர்வளம் மற்றும் நிலவின் இயற்கை நிலையை ஆராய்வதற்காக இஸ்ரோ, கடந்த ஜூலை 22 ஆம் தேதி சந்திரயான் 2 விண்கலத்தை விண்ணில் ஏவியது. இந்த செயற்கைக்கோள் இதுவரை யாரும் பயணிக்காத நிலவின் தென் துருவத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கி ஆய்வு மேற்கொள்ள இருக்கிறது.

சந்திரயான் 2 திட்டத்தின் முதல் படியாக, கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதியன்று, பூமியின் சுற்றுவட்டப் பாதையிலிருந்து விலகி, நிலவை நோக்கி நேர்க்கோட்டில் பயணிக்கத் தொடங்கியது. பின்னர் ஆகஸ்ட் 20 ஆம் தேதி நிலவின் சுற்றுவட்டப் பாதைக்குள் சந்திரயான் 2 பயணிக்கத் தொடங்கியது. நேர்க்கோட்டில் பயணிக்கத் தொடங்கிய சந்திரயான் 2 இன் உயரம் அடுத்தடுத்து குறைக்கப்பட்டு நிலவை சுற்றிவரத் துவங்கியது. பின்னர் ஆகஸ்ட் 28 ஆம் தேதி மூன்றாவது முறையாகச் சந்திரயானின் சுற்று வட்டப் பாதை மாற்றி அமைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து நான்காவது முறையாகக் கடந்த ஆகஸ்ட் 30 ஆம் தேதி, சந்திரயான் 2 செயற்கைக்கோள் தனது சுற்று வட்டப் பாதையை வெற்றிகரமாக மாற்றி பயணத்தைத் தொடர்ந்தது. இதனைத் தொடர்ந்து தற்பொழுது ஐந்தாவது முறையாக அல்லது இறுதி முறையாகச் சந்திரயான் 2 விண்கலத்தின் சுற்று வட்டப்பாதை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சந்திராயன் 2 விண்கலத்தில் இருந்து லேண்டர் விக்ரம் கருவி இன்று பிற்பகல் 1.25 மணியளவில் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டது. என்று இஸ்ரோ அறிவித்துள்ளது.  
சந்திரயானின் 2 இன் சுற்றுப்பாதை உயரம் குறைந்தபட்சம் 119 கி.மீ என்றும், அதிகபட்சம் 127 கி.மீ என மாற்றி அமைக்கப்பட்டிருப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. அடுத்தகட்டமாக சந்திரயான் 2 விண்கலம் செப்டம்பர் 7 ஆம் தேதி, இதுவரை யாரும் பயணிக்காத நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கி, தனது ஆய்வை மேற்கொள்ளுமென்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இந்நிலையல் லேட்டர் பிரிக்கப்பட்டதைத்தொடர்ந்து மேலும் 2 முறை விண்கலத்தின் நீள் வட்டப்பாதை குறைப்பு நடவடிக்கை செப்டம்பர் 3 மற்றும் 4 தேதிகளில் நடைபெறும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 
 

;