science

img

இந்த ஆண்டுக்குள் 30 விண்வெளி திட்டங்கள் முடிக்கப்படும் - இஸ்ரோ தலைவர்

இந்த ஆண்டுக்குள் 30 விண்வெளி திட்டங்கள் முடிக்கப்படும் என்று இஸ்ரோ தலைவர் சிவன் கூறியுள்ளார்.

இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி சி-45 ராக்கெட் நேற்று வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. முதல்முறையாக 3 புவி வட்டபாதையில் செயற்கைக்கோள்களை நிலை நிறுத்தி சாதனை படைத்துள்ளது. 

இதை அடுத்து, வரும் மே மாதம் 2-வது வாரத்துக்கு மேல் எட்டாம் வகுப்பு முடித்துள்ள 108 மாணவர்கள் இந்தியா முழுவதும் தேர்வு செய்யப்பட்டு பெங்களூருவில் உள்ள இஸ்ரோ தலைமையகத்தில், அவர்களுக்கு 15 நாட்கள் பயிற்சியாக விண்வெளி தொழில்நுட்பம், ராக்கெட் தொழில்நுட்பம், செயற்கைக்கோள்கள் குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்தார்.

மேலும் , மே மாத நடுவில் பி.எஸ்.எல்.வி சி-46, பி.எஸ்.எல்.வி சி-47, சந்திரயான்-2 ஆகிய திட்டங்கள் உள்ளதாகவும், இந்த வருடத்துக்குள் 30 விண்வெளி திட்டங்களை முடிக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


;