science

img

இஸ்ரோவின் ஜிசாட்-30 வெற்றி

 பிரெஞ்ச் கயானா,ஜன.17- ஒளிபரப்பு மற்றும் தொலைத்தொடர்பு சேவைக்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவின் ஜிசாட்-30 செயற்கைக்கோள் ஜனவரி 17 வெள்ளியன்று பிரெஞ்ச் கயானாவின் ஏவுதளத்தில்  இருந்து விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. புவிசுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டில் தங்களது முதல் செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில்  ஏவப்பட்டதை இஸ்ரோ மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளது. 3,357 கிலோ எடை கொண்ட ஜிசாட்-30 செயற்கைக்கோள், தென் அமெரிக்காவில் உள்ள பிரெஞ்சு கயானா ஏவு தளத்தில் இருந்து, அதிக எடையை சுமந்து செல்லும் திறன் கொண்ட ஏரியான்-5 ராக்கெட் மூலம் வெள்ளியன்று அதிகாலை 2.35 மணிக்கு ஏவப்பட்டது. 

இதுகுறித்து இஸ்ரோ நிறுவனம் கூறுகையில், ஒளிபரப்பு மற்றும் தொலைத் தொடர்பு சேவைகளுக்கு பயன்படும் வகை யில், இன்சாட்4ஏ செயற்கைக்கோளுக்கு பதி லாக ஜிசாட்-30 செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டுள்ளது.  இந்த ஜிசாட்30 செயற்கைக் கோளானது கியூ-பேண்ட்டில் இந்திய நிலப் பரப்பு மற்றும் தீவுகளிலும் சி-பேண்ட்டில் வளைகுடா நாடுகள், ஏராளமான ஆசிய நாடுகள் மற்றும் ஆஸ்திரேலியாவை உள்ள டக்கிய பகுதிகளிலும் தனது பணியை செய்ய வுள்ளதாக  இஸ்ரோ தெரிவித்துள்ளது. செல்போன் சேவை, தொலைக்காட்சி ஒளிபரப்பு, டெலிபோர்ட் சேவைகள், டி.டி.ஹெச் சேவை, டிஜிட்டல் செயற்கைக்கோள் செய்தி சேகரிப்பு போன்ற பயன்பாட்டிற்கு, இந்த செயற்கைக்கோள் உதவும். விண்ணில் ஏவப்பட்டு வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டுள்ள ஜிசாட்-30 செயற்கைக்கோ ளின் ஆயுட்காலம் 15 ஆண்டுகள் ஆகும்.

;