science

img

சந்திராயன்-2 செயற்கைக்கோள் 13 கருவிகளை எடுத்து செல்கிறது- இஸ்ரோ தகவல்

நிலவுக்கு செல்லும் சந்திராயன்-2 செயற்கைக்கோள், நாசாவின் ஒரு ஆய்வுக் கருவி உட்பட 13 ஆய்வு கருவிகளை கொண்டு செல்கிறதாக இஸ்ரோ உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த சந்திராயன்-2 செயற்கைக்கோள், நிலவின் சுற்றுவட்டப் பாதையில் சுற்றிவரும் 8 ஆர்பிட்டர்கள், நிலவில் தரையிறங்க உதவும் 3 லேண்டர் (விக்ரம்), நிலவின் பரப்பில் ஆய்வு செய்யும் 2 ரோவர் (பிரக்யான்) மற்றும் நாசாவின் ஒரு ஆய்வு கருவியை ஆகியவற்றை கொண்டு செல்கிறது. 3.8 டன் எடை கொண்ட இந்த செயற்கைக்கோள், வரும் ஜூலை 9-ஆம் தேதிக்கும், ஜூலை 16ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் விண்ணுக்கு ஏவப்பட்டு, வரும் செப்டம்பர் 6-ஆம் தேதி நிலவில் தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இந்த செயற்கைக்கோள் நிலவின் சுற்றுவட்டப்பாதைக்கு அடைந்த உடன், ஆர்ப்பிட்டரில் இருந்து லேண்டர் விக்ரமானது பிரிந்து நிலவின் தென்துருவத்திற்கு அருகே தரையிறங்கும். இந்த செயற்கைக்கோள், ஜிஎஸ்எல்வி எம்கே-III என்ற விண்கலம் மூலம் விண்ணில் செலுத்தப்பட உள்ளது.நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கும் முதல் லேண்டர் என்ற பெருமையையும் இந்த லேண்டர் பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


லேண்டர் விக்ரம் தரையிறங்கிய பிறகு, அதிலிருந்து ரோவர் வெளியேறி நிலவின் பரப்பில் ஆய்வுகளை மேற்கொள்ளும். நிலவில் 14 நாட்கள் தங்கியிருந்து, பகல் நேர சோதனைகள் மேற்கொள்ளும் இந்த ரோவர் 100 மீ தூரம் சென்று, நிலவின் பரப்பை ஆய்வு செய்து புகைப்படங்கள் உள்ளிட்ட ஆய்வுத் தகவல்களை நிலவின் சுற்றுப்பாதையில் சுற்றிவரும் ஆர்பிட்டர் மூலமாக பூமிக்கு 15 நிமிடங்களில் அனுப்பும். சந்திராயன்-2 திட்டத்தில், நிலவின் பரப்பை படம் எடுக்கவும், பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்வதற்காகவும் 13 ஆய்வுக் கருவிகள் இடம்பெற உள்ளன. 


இதுதவிர நாசாவின் கருவி ஒன்றும் இடம்பெற உள்ளதாகவும், அது லேண்டர் உடன் இணைக்கப்படும் என்றும், அந்த கருவி பூமிக்கும் நிலவுக்கும் இடையேயான தூரம் தொடர்பான அளவீடுகளுக்கு பயன்படுத்தப்பட உள்ளது. மேலும் நிலவின் பரப்பில் லேண்டர் விக்ரம் எங்கு தரையிறங்கியது என்பதை துல்லியமாக உறுதிப்படுத்துவதற்கும் நாசாவின் கருவி உதவும் என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.


;