science

img

விண்ணில் ஏவப்படும் பிஎஸ்எல்வி சி-46 ராக்கெட்டை நேரில் பார்க்க 1000 பேருக்கு வாய்ப்பு

ஸ்ரீஹரிகோட்டாவில் வரும் 22-ஆம் தேதி விண்ணில் ஏவப்படும் பிஎஸ்எல்வி சி-46 ராக்கெட்டை நேரில் பார்வையிட விரும்பும் 1000 பேருக்கு ஆன்லைன் மூலம் பதிவு செய்யும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது.

இஸ்ரோ வளாகத்தில் விண்வெளி கண்காட்சியகம் பார்வையாளர்கள் அமர்ந்து பார்க்கும் வகையிலான திறந்தவெளி பார்வையாளர் மாடம், ராக்கெட், செயற்கைக்கோள், புகைப்பட கண்காட்சியகம் மற்றும் இந்திய விண்வெளி ஆராய்ச்சியின் வரலாறு, தொழில்நுட்ப வளர்ச்சியை அறிந்து கொள்வதற்கான தகவல்கள் ஆகியவற்றை கொண்ட பூங்கா ஒன்றை இஸ்ரோ அமைத்துள்ளது.

இந்நிலையில், வரும் மே 22-ஆம் தேதி காலை 5.27 மணிக்கு அளவில் பிஎஸ்எல்வி சி-46 ராக்கெட் விண்ணில் ஏவப்பட உள்ளது. இந்த ராக்கெட் ஏவுதலை பொதுமக்கள் நேரில் பார்ப்பதற்கான முன் பதிவை இஸ்ரோ தொடங்கியுள்ளது. இதை பார்ப்பதற்கு 1000 பேர் வரை அனுமதிக்கப்பட உள்ளனர். விருப்பம் உள்ளவர்கள் இஸ்ரோ இணையதளத்தில் தேவையான விவரங்களை பதிவு செய்து அனுமதி சீட்டை பதிவிறக்கம் செய்யலாம். 


;