science

img

வரும் ஜூலை மாதம் சந்திராயன்-2 விண்ணில் ஏவப்படும் - இஸ்ரோ தகவல்

வரும் ஜூலை மாதத்தில், நிலவில் ஆய்வு மேற்கொள்ள, சந்திராயன்-2 செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படும் என்ற தகவலை இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இந்தியா முதன்முதலில் நிலவில் ஆய்வு செய்ய சந்திராயன்-1 என்ற செயற்கைக்கோளை கடந்த 2008-ஆம் ஆண்டும் அனுப்பியது. மிகக்குறைந்த செலவில் அனுப்பப்பட்ட செயற்கைக்கோள் என்ற பெருமையை சந்திராயன் 1 இந்தியாவிற்குப் பெற்று தந்தது.

இதனை தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு பிறகு, உலகிலேயே முதல் முறையாக நிலவின் தெற்கு முனைக்கு அருகில் சந்திராயன்- 2 அனுப்பப்பட உள்ளது. 3.8 டன் எடை கொண்ட இந்த செயற்கைக்கோள், வரும் ஜூலை 9-ஆம் தேதியிலிருந்து 16-ஆம் தேதிக்குள் விண்ணில் ஏவப்படும் என்றும், செப்டம்பர் 6-ஆம் தேதி நிலவில் தரையிறங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாக இஸ்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. 

இந்த செயற்கைக்கோள், ஜிஎஸ்எல்வி எம்கே-III என்ற ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. ஆர்பிட்டர், லேண்டர் மற்றும் ரோவர் ஆகியவை கொண்டு செல்லும் இந்த செயற்கைக்கோள், தென்முனையில் சாப்ட் லேண்டிங் மூலம் தரையிறக்கப்படும். 

இதையடுத்து நிலவில் 14 நாட்கள் தங்கியிருந்து, பகல் நேர சோதனைகள் மேற்கொள்கிறது. ரோவர் 100 மீ தூரம் சென்று, நிலவின் பரப்பை ஆய்வு செய்யும். மேலும் கொண்டு செல்லும் உபகரணங்கள் மூலம், பல்வேறு சோதனைகளை மேற்கொள்ள இருக்கிறது. இதன்பிறகு ஆர்பிட்டர் மற்றும் ரோவர் ஆகியவை நிலவை படம்பிடித்து 15 நிமிடங்களில் புகைப்படங்களை அனுப்பும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது. 


;