science

img

வானிலை முன்னறிவிப்பை மேம்படுத்த இரு சூப்பர் கம்ப்யூட்டர்களை வங்க திட்டம்

நாட்டில் வானிலை முன்னறிவிப்பை மேம்படுத்தும் நோக்கில், இரு சூப்பர் கம்ப்யூட்டர்களை வாங்க அரசு முடிவெடுத்துள்ளது. இதன் திறன் எட்டு மடங்கு அதிகமாய் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து புவியியல் அமைச்சகத்தின் (எம்ஓஇஎஸ்) செயலாளர் எம். ராஜீவன் கூறுகையில், சுமார் 1,500 கோடி ரூபாய் செலவில், 80 பீட்டாஃப்ளாப்ஸ் வேகத்துடன் இயங்கக்கூடிய இந்த சூப்பர் கம்ப்யூட்டர்களை வாங்க திட்டமிடப்பட்டுள்ளது.

தற்போது புவியியல் அமைச்சகத்தின் கீழ் இரண்டு சூப்பர் கம்ப்யூட்டர்கள் உள்ளன. இது நொய்டா வானிலை முன்னறிவிப்பு மையத்திலும் (NCMRWF), புனேயில் உள்ள வெப்ப மண்டல வானிலை ஆராய்ச்சி மையத்திலும் இருக்கிறது. இது 10 பீட்டாஃப்ளாப்ஸ் திறன் கொண்டது. புதிய சூப்பர் கம்ப்யூட்டர்கள், இந்த இரு வானிலை மையங்களில் இயக்கப்படும். இதற்காக நிபுணர்கள் குழு உருவாக்கி, 40 பீட்டாஃப்ளாப்ஸ் திறன் கொண்ட இரண்டு சூப்பர் கம்ப்யூட்டர்கள் வாங்குவதா அல்லது இரண்டு 60 பீட்டாஃப்ளாப்ஸ் திறன் மற்றும் ஒரு 20 பீட்டாஃப்ளாப்ஸ் திறன் கொண்ட சூப்பர் கம்ப்யூட்டர் வாங்குவதா என்பதை குறித்த மதிப்பீடு செய்து வருகின்றனர்.

மேலும், வானிலை முன்னறிவிப்பை மேம்படுத்திக் கொண்டிருப்பதாகவும், தற்போது 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ள செயற்கைக்கோள் மூலமாக வானிலை முன்னறிவிப்பு கொடுப்பதாகவும், மாவட்ட மற்றும் தொகுதி அளவிலான முன்னறிவிப்புகளுக்கு 5 கிலோமீட்டர் தூரத்திற்கு செயற்கைக்கோளை எடுத்து செல்ல திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கு அதிகமான திறன் கொண்ட கம்ப்யூட்டர்கள் தேவைப்படுகிறது என்று தெரிவித்தார்.

இந்த சூப்பர்கம்ப்யூட்டர்கள், வானிலை முன்னறிவிப்புடன் தொடர்புடைய தரவு மற்றும் வெவ்வேறு வானிலை மற்றும் காலநிலை மாதிரிகள் இயங்குவதற்காகப் பயன்படுத்தப்படுகின்றன. பருவமழை மற்றும் தீவிரமான வானிலை நிகழ்வுகளை கணக்கிடுவதில் அவை முக்கிய பங்கைக் கொண்டுள்ளன. மேலும் இந்தியாவின் வானிலை ஆராய்ச்சி மையத்தின் பிற நிறுவனங்களும் இதனை பயன்படுத்துகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
 

;